/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'டி-20' உலக கோப்பை: கனடா அணி தகுதி
/
'டி-20' உலக கோப்பை: கனடா அணி தகுதி
ADDED : ஜூன் 22, 2025 05:40 PM

கிங் சிட்டி: 'டி-20' உலக கோப்பை தொடருக்கு கனடா அணி தகுதி பெற்றது.
இந்தியா, இலங்கையில், அடுத்த ஆண்டு ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 10வது சீசன் நடக்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள இடங்களுக்கு தகுதிச் சுற்று நடத்தப்படுகிறது.
அமெரிக்க அணிகளுக்கான தகுதிச் சுற்று கனடாவில் நடந்தது. இதில் கனடா, பெர்முடா, பஹாமஸ், கேமன் தீவு என 4 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை விளையாடும். முடிவில், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி உலக கோப்பைக்கு தகுதி பெறும்.
கிங் சிட்டியில் நடந்த லீக் போட்டியில் கனடா அணி (236/6) 126 ரன் வித்தியாசத்தில் கேமன் தீவு அணியை (110/6) வீழ்த்தியது. இதுவரை விளையாடிய 5 போட்டியிலும் வெற்றி பெற்ற கனடா அணி, 10 புள்ளிகளுடன் முதலிடத்தை உறுதி செய்தது. 'டி-20' உலக கோப்பைக்கு தகுதி பெற்ற 13வது அணியானது கனடா. இரண்டாவது முறையாக 'டி-20' உலக கோப்பை பிரதான சுற்றில் விளையாடுகிறது. இதற்கு முன், கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடந்த 9வது சீசனில் லீக் சுற்றோடு திரும்பியது.