/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'சிக்சர் மன்னன்' பூரன் * கெய்லை முந்தினார்
/
'சிக்சர் மன்னன்' பூரன் * கெய்லை முந்தினார்
ADDED : செப் 03, 2024 12:20 AM

பசெட்டெர்ரே: ஒரு ஆண்டில் அதிக சிக்சர் அடித்த வீரர் என சாதனை படைத்தார் நிகோலஸ் பூரன்.
வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரிமியர் லீக் 'டி-20' தொடர் நடக்கிறது. லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ், செயின்ட் கிட்ஸ் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய டிரின்பாகோ அணிக்கு நிகோலஸ் (வெ.இண்டீஸ்) பூரன் கைகொடுத்தார். இவர் 43 பந்தில் 9 சிக்சர், 7 பவுண்டரி உட்பட 97 ரன் எடுத்தார். டிரின்பாகோ அணி 20 ஓவரில் 250/4 ரன் குவித்தது. கார்ட்டி (73), கேப்டன் போலார்டு (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
செயின்ட் கிட்ஸ் அணிக்கு லீவிஸ் (39), லுாயிஸ் (56), ஸ்டப்ஸ் (39), ரியான் (25) ஓரளவு கைகொடுத்தனர். மற்றவர் ஏமாற்ற, 20 ஓவரில் 206/8 ரன் மட்டும் எடுத்தது. டிரின்பாகோ அணி 44 ரன் வித்தியாசத்தில் வென்றது.
கெய்லை முந்தினார்
நேற்று 9 சிக்சர் அடித்த பூரன், ஒரு ஆண்டில் (2024) அதிக சிக்சர் அடித்து சாதனை படைத்தார். 57 இன்னிங்சில், 139 சிக்சர் (1145 பந்து) விளாசியுள்ளார். இவர், வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (2015ல் 36 இன்னிங்சில், 135 சிக்சர், 1012 பந்து) சாதனையை தகர்த்தார்.
* சர்வதேசம், உள்ளூர் என ஒட்டுமொத்த 'டி-20' அரங்கில் பூரன், இதுவரை 551 சிக்சர் (355 போட்டி) அடித்து, 4வது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடத்திலும் வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (463ல் 1056), போலார்டு (677ல் 877), ரசல் (518ல் 714) உள்ளனர்.