/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பூரன் புதிய சாதனை * ஒரே ஆண்டில் அதிக 'டி-20' ரன்
/
பூரன் புதிய சாதனை * ஒரே ஆண்டில் அதிக 'டி-20' ரன்
ADDED : செப் 28, 2024 11:08 PM

தரவுபா: 'டி-20' அரங்கில் ஒரே ஆண்டில் அதிக ரன் எடுத்த வீரர் என புதிய சாதனை படைத்தார் பூரன்.
வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரிமியர் லீக் 'டி-20' தொடர் நடக்கிறது. லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ், பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய டிரின்பாகோ அணிக்கு ஜேசன் ராய் (0), பார்ரிஸ் (5) ஜோடி ஏமாற்றியது. நிகோலஸ் பூரன், 15 பந்தில் 27 ரன் எடுத்தார். கார்டி (32), கேப்டன் போலார்டு (42) கைகொடுக்க, டிரின்பாகோ அணி 20 ஓவரில் 175/7 ரன் எடுத்தது. பின் களமிறங்கிய பார்படாஸ் அணி 20 ஓவரில் 145/9 ரன் மட்டும் எடுத்து 30 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
புதிய சாதனை
இதையடுத்து 'டி-20' அரங்கில் ஒரு ஆண்டில் அதிக ரன் எடுத்த வீரர் வரிசையில் முதலிடம் பெற்றார். இதுவரை 66 இன்னிங்சில் 2059 ரன் எடுத்துள்ளார். பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (2021ல் 48 இன்னிங்சில் 2036 ரன்), இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் (61ல் 1,946 ரன்) அடுத்து உள்ளனர்.