/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'சூப்பர்-8' சுற்றில் ஆப்கானிஸ்தான்
/
'சூப்பர்-8' சுற்றில் ஆப்கானிஸ்தான்
ADDED : ஜூன் 14, 2024 11:19 PM

தரவுபா: 'டி-20' உலக கோப்பை தொடரின் 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான். நேற்று பப்புவா நியூ கினியாவை 7 விக்கெட்டில் சாய்த்தது.
வெஸ்ட் இண்டீசில் நடந்த 'சி' பிரிவு லீக் போட்டியில் நேற்று ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆப்கானிஸ்தான் பீல்டிங் தேர்வு செய்தது.
பரூக்கி அபாரம்
பப்புவா நியூ கினியா அணிக்கு பரூக்கி டோனி (11), கேப்டன் ஆசாத் (3) ஜோடி துவக்கம் தந்தது. வேகத்தில் மிரட்டிய பரூக்கி, சியகா (0), செசேவை (0) அடுத்தடுத்த பந்தில் அவுட்டாக்கினார். பின் வரிசையில் கிப்ளின், அதிகபட்சம் 27 ரன் எடுத்தார். பப்புவா நியூ கினியா அணி 19.5 ஓவரில் 95 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பரூக்கி 3, நவீது உல் ஹக் 2 விக்கெட் சாய்த்தனர்.
குல்பதின் விளாசல்
ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ் (11), இப்ராஹிம் (0) ஜோடி துவக்கம் தந்தது. அஸ்மதுல்லா 13 ரன் எடுத்தார். குல்பதின் கைகொடுக்க, ஆப்கானிஸ்தான் அணி 15.1 ஓவரில் 101/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது. குல்பதின் (49), முகமது நபி (16) அவுட்டாகாமல் இருந்தனர்.
நியூசி., பரிதாபம்
'சி' பிரிவில் முதல் இரு இடம் பிடித்த ஆப்கானிஸ்தான் (6), வெஸ்ட் இண்டீஸ் (6) அணிகள் 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறின. 3, 4வது இடத்தில் உள்ள உகாண்டா (2), பப்புவா நியூ கினியா (0) வெளியேறின. முதல் இரு போட்டியில் தோற்ற நியூசிலாந்து, அடுத்த இரு போட்டியில் வென்றாலும் 4 புள்ளி மட்டும் பெற முடியும். அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது.
கடந்த 2015, 2019, 2023ல் ஒருநாள், 2016, 2021, 2022ல் 'டி-20' உலக கோப்பை தொடர்களில் அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து. இம்முறை முதல் சுற்றுடன் நடையை கட்டியது.