/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆஸி., வீராங்கனை அலிசா அச்சம் * வங்கதேசத்தில் விளையாட...
/
ஆஸி., வீராங்கனை அலிசா அச்சம் * வங்கதேசத்தில் விளையாட...
ஆஸி., வீராங்கனை அலிசா அச்சம் * வங்கதேசத்தில் விளையாட...
ஆஸி., வீராங்கனை அலிசா அச்சம் * வங்கதேசத்தில் விளையாட...
ADDED : ஆக 19, 2024 11:12 PM

சிட்னி: ''கலவரத்தில் இருந்து வங்கதேசம் இன்னும் மீண்டு வரவில்லை. அங்கு சென்று 'டி-20' உலக கோப்பை தொடரில் விளையாடுவது சரியாக இருக்காது,'' என அலிசா ஹீலே தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், வங்கதேசத்தில் பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை தொடர் வரும் அக்., 3--20ல் நடக்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள், 18 நாள், 23 போட்டிகள் போட்டிகள், தாகா, ஷில்ஹெட் என இரு மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேசத்தில் கலவரம் ஏற்பட்டது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக, ராணுவம் ஆட்சி அமைத்துள்ளது. இதனால் உலக கோப்பை தொடரை வேறு இடத்துக்கு மாற்ற ஐ.சி.சி., முயற்சித்து வருகிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா மறுப்பு தெரிவித்த நிலையில், ஜிம்பாப்வே அல்லது ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த முயற்சி நடக்கின்றன.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அணி வீராங்கனை அலிசா ஹீலே கூறியது:
இப்போதுள்ள சூழலில் வங்கதேசத்தில் உலக கோப்பை தொடரில் விளையாடுவது என்பதை, எப்படி புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் வங்கதேசம் செல்வது சரியாக இருக்காது.
ஏனெனில் கலவரத்தில் இருந்து மக்கள், இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை. மக்கள் அங்கு இறந்து கொண்டிருக்கும் சூழலில், அவர்களுக்கு உதவி செய்யத்தான் ஆட்கள் தேவைப்படுகின்றனர். இந்தச் சூழலில் அங்கு சென்று விளையாடுவது, அவர்களிடம் இருந்து பணத்தை பறித்துக் கொண்டு வருவதற்கு சமமான செயல்.
இதுகுறித்து இறுதி முடிவெடுப்பதை ஐ.சி.சி.,யிடம் விட்டு விடுகிறேன். மற்றபடி வங்கதேசம் அல்லது எந்த இடத்தில் உலக கோப்பை தொடர் நடந்தாலும் எங்களை பெரியளவு பாதிக்காது. ஏனெனில், ஆஸ்திரேலியா எதற்கும் தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

