/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வெள்ளி வென்றார் ரூபா * ஆசிய டேக்வாண்டோவில்...
/
வெள்ளி வென்றார் ரூபா * ஆசிய டேக்வாண்டோவில்...
UPDATED : அக் 19, 2024 10:37 PM
ADDED : அக் 18, 2024 11:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டங்கெராங்: இந்தோனேஷியாவில் ஆசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் நடந்தது. பெண்களுக்கான பாரம்பரிய கலை பிரிவில் இந்தியா சார்பில் ரூபா பேயர் களமிறங்கினார். உலகத் தரவரிசையில் 9வது இடத்திலுள்ள ரூபா (அருணாச்சல பிரதேசம்), நேரடியாக காலிறுதியில் களமிறங்கினார். இதில் இந்தோனேஷியா அவிஷாவை வீழ்த்தினார்.
அரையிறுதியில் சிங்கப்பூரின் ஜெர்மைனை வீழ்த்தினார். பைனலில் ரூபா, இந்தோனேஷியாவின் ரச்மேனியாவிடம் தோற்று, வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான பிரிவில் இந்தியாவின் சின்மே பெஹரா, அரையிறுதியில் தோல்வியடைய, வெண்கலப் பதக்கம் கிடைத்தது.