/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பைனலுக்கு முன்னேறியது தமிழகம்: கூச் பெஹர் டிராபியில் கலக்கல்
/
பைனலுக்கு முன்னேறியது தமிழகம்: கூச் பெஹர் டிராபியில் கலக்கல்
பைனலுக்கு முன்னேறியது தமிழகம்: கூச் பெஹர் டிராபியில் கலக்கல்
பைனலுக்கு முன்னேறியது தமிழகம்: கூச் பெஹர் டிராபியில் கலக்கல்
ADDED : ஜன 02, 2025 10:15 PM

புனே: 'கூச் பெஹர் டிராபி' பைனலுக்கு தமிழக அணி முன்னேறியது. அரையிறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மகாராஷ்டிராவை வீழ்த்தியது.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான 'கூச் பெஹர் டிராபி' (4 நாள் போட்டி) நடத்தப்படுகிறது. புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்த அரையிறுதியில் மகாராஷ்டிரா, தமிழகம் அணிகள் மோதின. மகாராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 306 ரன் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 456 ரன் எடுத்திருந்தது.
நான்காம் நாள் ஆட்டத்தில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 492 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பின், 2வது இன்னிங்சை துவக்கிய மகாராஷ்டிரா அணிக்கு கேப்டன் நிராஜ் ஜோஷி (122) கைகொடுத்தார். மகாராஷ்டிரா அணி 2வது இன்னிங்சில் 284/9 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. தமிழகம் சார்பில் சச்சின், பிரவின் தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.
பின், 99 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி 23.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 102 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்ரேனிக் (37) அவுட்டாகாமல் இருந்தார். ஆட்ட நாயகன் விருதை முதல் இன்னிங்சில் 182 ரன் விளாசிய தமிழக அணியின் ராகவ் வென்றார்.வரும் ஜன. 7ல் ஆமதாபாத்தில் துவங்கவுள்ள பைனலில் தமிழகம், குஜராத் மோத உள்ளன.