/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தமிழகம் இமாலய வெற்றி: மும்பை அணியை வீழ்த்தியது
/
தமிழகம் இமாலய வெற்றி: மும்பை அணியை வீழ்த்தியது
ADDED : ஆக 30, 2024 06:44 PM

கோவை: டி.என்.சி.ஏ., லெவன் அணி 286 ரன் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.
தமிழக கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.,) சார்பில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடக்கிறது. கோவையில் நடந்த 'சி' பிரிவு லீக் போட்டியில் டி.என்.சி.ஏ., லெவன், மும்பை அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் டி.என்.சி.ஏ., லெவன் 379, மும்பை 156 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் டி.என்.சி.ஏ., லெவன் அணி 286 ரன் எடுத்தது.
பின், 510 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 2வது இன்னிங்சில் 223 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. முஷீர் கான் (40), ஷாம்ஸ் முலானி (68) ஆறுதல் தந்தனர். டி.என்.சி.ஏ., லெவன் அணி சார்பில் சாய் கிஷோர் 3 விக்கெட் சாய்த்தார். இரு இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட் (5+3) சாய்த்த சாய் கிஷோர் ஆட்ட நாயகன் விருது வென்றார். டி.என்.சி.ஏ., லெவன் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதியில் சத்தீஸ்கர்திண்டுக்கல், நத்தத்தில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியின் முதல் இன்னிங்சில் பரோடா 327, சத்தீஸ்கர் 427 ரன் எடுத்தன. பரோடா அணி 2வது இன்னிங்சில் 175 ரன் எடுத்தது. பின் சுலப இலக்கை (76 ரன்) விரட்டிய சத்தீஸ்கர் அணி 2வது இன்னிங்சில் 76/2 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.