/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தமிழக பவுலர்கள் அசத்தல்: ரஞ்சி கோப்பையில்
/
தமிழக பவுலர்கள் அசத்தல்: ரஞ்சி கோப்பையில்
ADDED : நவ 13, 2024 11:36 PM

ஆமதாபாத்: தமிழக பவுலர்கள் அசத்த, ரயில்வேஸ் அணி முதல் இன்னிங்சில் 229 ரன் மட்டும் எடுத்தது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'டி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ரயில்வேஸ் அணிகள் விளையாடுகின்றன. 'டாஸ்' வென்ற தமிழக அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
ரயில்வேஸ் அணிக்கு கேப்டன் பிரதம் சிங் (1), விவேக் சிங் (6) ஏமாற்றினர். சூரஜ் அஹுஜா (52), முகமது சைப் (60), பார்கவ் மேராய் (53) நம்பிக்கை தந்தனர். அஜித் ராம் 'சுழலில்' உபேந்திர யாதவ் (0), யுவராஜ் சிங் (8), ஹிமான்ஷு சங்வான் (18) சிக்கினர். ரயில்வேஸ் அணி முதல் இன்னிங்சில் 229 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. தமிழகம் சார்பில் அஜித் ராம் 4, குர்ஜப்னீத் சிங், சோனு யாதவ், லக்சயா ஜெயின் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய தமிழக அணி, ஆட்டநேர முடிவில் 19/0 ரன் எடுத்திருந்தது. ஷாருக்கான் (11), கேப்டன் நாராயண் ஜெகதீசன் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஷமி வருகை
இந்துாரில் நடக்கும் 'சி' பிரிவு லீக் போட்டியில் பெங்கால், மத்திய பிரதேசம் அணிகள் விளையாடுகின்றன. கணுக்கால் காயத்தில் இருந்து மீண்ட இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, ஓராண்டுக்கு பின் போட்டிக்கு திரும்பினார். பெங்கால் அணி சார்பில் விளையாடும் இவர், பேட்டிங்கில் 2 ரன் எடுத்தார். பின், பவுலிங்கில் 10 ஓவர் வீசிய இவர், 34 ரன் விட்டுக்கொடுத்தார். ஒரு 'மெய்டன் ஓவர்' வீசிய இவரால், ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை.