/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தமிழக பவுலர்கள் அபாரம்: கூச் பெஹார் டிராபியில்
/
தமிழக பவுலர்கள் அபாரம்: கூச் பெஹார் டிராபியில்
ADDED : நவ 21, 2024 10:41 PM

தேனி: தமிழக பவுலர்கள் அசத்த சத்தீஸ்கர் அணி முதல் இன்னிங்சில் 101 ரன்னுக்கு சுருண்டது.
தேனியில் உள்ள தமிழக கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கூச் பெஹார் டிராபி 'சி' பிரிவு லீக் போட்டியில் (நான்கு நாள்) தமிழகம், சத்தீஸ்கர் அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 211/7 ரன் எடுத்திருந்தது.
இரண்டாம் நாம் ஆட்டத்தில் கிரண் கார்த்திகேயன் (41) கைகொடுக்க தமிழக அணி முதல் இன்னிங்சில் 220 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. சத்தீஸ்கர் சார்பில் அன்கித் குமார் சிங், தனஞ்ஜெய் நாயக் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய சத்தீஸ்கர் அணி 101 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பிரதம் (39), கேப்டன் விகல்ப் திவாரி (29) ஆறுதல் தந்தனர். தமிழகம் சார்பில் 'சுழலில்' அசத்திய ஹேம்சுதேஷன் 5 விக்கெட் சாய்த்தார்.
பின் 2வது இன்னிங்சை துவக்கிய தமிழக அணி, ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 118 ரன் எடுத்து 237 ரன் முன்னிலை பெற்றிருந்தது. கிரண் கார்த்திகேயன் (61) அவுட்டாகாமல் இருந்தார்.