/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தமிழக பவுலர்கள் ஏமாற்றம்: ரஞ்சி கோப்பையில்
/
தமிழக பவுலர்கள் ஏமாற்றம்: ரஞ்சி கோப்பையில்
ADDED : அக் 26, 2024 09:39 PM

கோவை: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக பவுலர்கள் ஏமாற்றினர்.
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் ரஞ்சி கோப்பை தொடர் நடக்கிறது. கோவையில் நடக்கும் 'டி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், சத்தீஸ்கர் அணிகள் விளையாடுகின்றன.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த சத்தீஸ்கர் அணிக்கு ஆயுஷ் பாண்டே, ரிஷாப் திவாரி ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 124 ரன் சேர்த்த போது முகமது 'வேகத்தில்' ரிஷாப் திவாரி (46) வெளியேறினார். அபாரமாக ஆடிய ஆயுஷ் பாண்டே, முதல் தர போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இவர், 124 ரன்னில் அஜித் ராம் 'சுழலில்' சிக்கினார். பின் இணைந்த அனுஜ் திவாரி, சஞ்ஜீத் தேசாய் ஜோடி கைகொடுத்தது. இருவரும் அரைசதம் விளாசினர். இவர்களை பிரிக்க முடியாமல் தமிழக பவுலர்கள் தடுமாறினர்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் சத்தீஸ்கர் அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 293 ரன் எடுத்திருந்தது. அனுஜ் (68), சஞ்ஜீத் (52) அவுட்டாகாமல் இருந்தனர். தமிழகம் சார்பில் முகமது, அஜித் ராம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.