/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தமிழக பவுலர்கள் தடுமாற்றம்: புச்சி பாபு அரையிறுதியில்
/
தமிழக பவுலர்கள் தடுமாற்றம்: புச்சி பாபு அரையிறுதியில்
தமிழக பவுலர்கள் தடுமாற்றம்: புச்சி பாபு அரையிறுதியில்
தமிழக பவுலர்கள் தடுமாற்றம்: புச்சி பாபு அரையிறுதியில்
ADDED : செப் 02, 2024 11:31 PM

திருநெல்வேலி: டி.என்.சி.ஏ., பிரசிடென்ட் பவுலர்கள் ஏமாற்ற, ஐதராபாத் அணி முதல் இன்னிங்சில் 313 ரன் எடுத்தது.
தமிழக கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.,) சார்பில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடக்கிறது. திருநெல்வேலியில் நடக்கும் அரையிறுதியில் ஐதராபாத், டி.என்.சி.ஏ., பிரசிடென்ட் லெவன் அணிகள் விளையாடுகின்றன. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஐதராபாத் அணிக்கு ஹிமா தேஜா (91*), நிதேஷ் ரெட்டி (59), மிலிந்து (58) கைகொடுக்க, முதல் இன்னிங்சில் 313 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. டி.என்.சி.ஏ., பிரசிடென்ட் அணி சார்பில் குர்ஜப்னீத் சிங், முகமது, சித்தார்த், முகமது அலி தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
ஆட்டநேர முடிவில் டி.என்.சி.ஏ., பிரசிடென்ட் அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்திருந்தது.
சத்தீஸ்கர் அபாரம்: திண்டுக்கல், நத்தத்தில் நடக்கும் மற்றொரு அரையிறுதியில் சத்தீஸ்கர், டி.என்.சி.ஏ., லெவன் அணிகள் விளையாடுகின்றன. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த சத்தீஸ்கர் அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் 294/3 ரன் எடுத்திருந்தது. ஆயுஷ் பாண்டே (82), அனுஜ் திவாரி (93) கைகொடுத்தனர். அமன்தீப் (35), பிரதீக் (61) அவுட்டாகாமல் இருந்தனர். டி.என்.சி.ஏ., லெவன் அணி சார்பில் அஜித் ராம் 2 விக்கெட் வீழ்த்தினார்.