/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தமிழக அணி 'டிரா': புச்சி பாபு கிரிக்கெட்டில்
/
தமிழக அணி 'டிரா': புச்சி பாபு கிரிக்கெட்டில்
ADDED : ஆக 24, 2024 10:58 PM

கோவை: புச்சி பாபு கிரிக்கெட் லீக் போட்டியை தமிழக அணிகள் 'டிரா' செய்தன.
தமிழக கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.,) சார்பில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடக்கிறது. கோவையில் நடந்த 'சி' பிரிவு லீக் போட்டியின் முதல் இன்னிங்சில் டி.என்.சி.ஏ., 'லெவன்' 393, ஹரியானா 218 ரன் எடுத்தன. டி.என்.சி.ஏ., 'லெவன்' அணி 2வது இன்னிங்சில் 177/5 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. பின் 353 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹரியானா அணி, கடைசி நாள் ஆட்டநேர முடிவில் 201/5 ரன் எடுத்திருந்தது.
இதனையடுத்து போட்டி 'டிரா' என அறிவிக்கப்பட்டது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற டி.என்.சி.ஏ., 'லெவன்' அணிக்கு 3 புள்ளி வழங்கப்பட்டது. ஹரியானா ஒரு புள்ளி பெற்றது. இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட் கைப்பற்றிய சாய் கிஷோர் (டி.என்.சி.ஏ.,) ஆட்ட நாயகன் விருது வென்றார்.
'பிரசிடென்ட்' அணி 'டிரா'
சேலத்தில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியின் முதல் இன்னிங்சில் டி.என்.சி.ஏ., 'பிரசிடென்ட் லெவன்' 459, இந்தியன் ரயில்வேஸ் 355 ரன் எடுத்தன. 'பிரசிடென்ட் லெவன்' அணி 2வது இன்னிங்சில் 227/4 ரன்னுக்கு 'டிக்ளேர்' செய்தது. பின் 332 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ரயில்வேஸ் அணி, ஆட்டநேர முடிவில் 244/7 ரன் எடுத்திருந்தது. இதனையடுத்த போட்டி 'டிரா' ஆனது. முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலை அடிப்படையில் 'பிரசிடென்ட் லெவன்' அணிக்கு 3 புள்ளி வழங்கப்பட்டது. ரயில்வேஸ் அணி ஒரு புள்ளி பெற்றது. 182 ரன் விளாசிய முகமது அலி ('பிரசிடென்ட் லெவன்') ஆட்ட நாயகன் விருது வென்றார்.