sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

தமிழக அணி அசத்தல்: புச்சி பாபு கிரிக்கெட்டில்

/

தமிழக அணி அசத்தல்: புச்சி பாபு கிரிக்கெட்டில்

தமிழக அணி அசத்தல்: புச்சி பாபு கிரிக்கெட்டில்

தமிழக அணி அசத்தல்: புச்சி பாபு கிரிக்கெட்டில்


ADDED : ஆக 22, 2024 11:27 PM

Google News

ADDED : ஆக 22, 2024 11:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தமிழக கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.,) சார்பில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

சேலத்தில் நடக்கும் 'பி' பிரிவு லீக் போட்டியின் முதல் நாள் முடிவில் டி.என்.சி.ஏ., பிரசிடென்ட் லெவன் அணி 283/6 ரன் எடுத்திருந்தது. நேற்றைய 2ம் நாள் ஆட்டத்தில் முகமது அலி 182 ரன் விளாசினார். டி.என்.சி.ஏ., பிரசிடென்ட் அணி முதல் இன்னிங்சில் 459 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.ஆட்டநேர முடிவில் இந்தியன் ரயில்வேஸ் அணி முதல் இன்னிங்சில் 185/2 ரன் எடுத்திருந்தது. பிரதம் சிங் (104) அவுட்டாகாமல் இருந்தார்.

சாய் கிஷோர் அசத்தல்: கோவையில் நடக்கும் 'சி' பிரிவு லீக் போட்டியின் முதல் இன்னிங்சில் பாபா இந்திரஜித் (167) கைகொடுக்க டி.என்.சி.ஏ., லெவன் அணி 393 ரன் எடுத்தது. ஆட்டநேர முடிவில் ஹரியானா அணி முதல் இன்னிங்சில் 182/6 ரன் எடுத்திருந்தது. டி.என்.சி.ஏ., சார்பில் சாய் கிஷோர் 3 விக்கெட் சாய்த்தார்.

கடின இலக்கு: திண்டுக்கல், நத்தத்தில் நடக்கும் 'டி' பிரிவு லீக் போட்டியின் முதல் இன்னிங்சில் பரோடா 255 ரன் எடுத்தது. ஜம்மு காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 114 ரன்னுக்கு சுருண்டது. பின் 2வது இன்னிங்சில் பரோடா அணி 254 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பின், 396 ரன் என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய காஷ்மீர் அணி, ஆட்டநேர முடிவில் 14/0 ரன் எடுத்திருந்தது.

ஐதராபாத் '293': திருநெல்வேலியில் நடக்கும் 'ஏ' பிரிவு லீக் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜார்க்கண்ட் அணி 178 ரன் எடுத்தது. ராகுல் சிங் (56), மிலிந்து (58*) கைகொடுக்க ஐதராபாத் அணி முதல் இன்னிங்சில் 293 ரன் எடுத்தது. ஆட்டநேர முடிவில் ஜார்க்கண்ட் அணி 2வது இன்னிங்சில் 24/3 ரன் எடுத்திருந்தது.






      Dinamalar
      Follow us