/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தமிழக அணி அபார வெற்றி: வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்
/
தமிழக அணி அபார வெற்றி: வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்
தமிழக அணி அபார வெற்றி: வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்
தமிழக அணி அபார வெற்றி: வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்
ADDED : ஜன 03, 2025 11:19 PM

விஜயநகரம்: விஜய் ஹசாரே லீக் போட்டியில் தமிழக அணி 10 விக்கெட்டில், திரிபுராவை வீழ்த்தியது.
இந்தியாவில் விஜய் ஹராரே டிராபி ('லிஸ்ட் ஏ') தொடர் நடக்கிறது. 38 அணிகள், 5 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. ஆந்திராவில் நடந்த போட்டியில் தமிழகம், திரிபுரா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற தமிழகம் பீல்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய திரிபுரா அணி, வருண் சக்ரவர்த்தி சுழலில் சிக்கி தள்ளாடியது. ஜெஹு ஆண்டர்சன் (12), அக்னி சோப்ரா (23), மோகித் (17) தவிர வேறு யாரும் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை. திரிபுரா அணி 21.2 ஒவரில், 71 ரன்னுக்கு சுருண்டது. வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட் சாய்த்தார்.
எளிய இலக்கைத் துரத்திய தமிழக அணி 10 ஓவரில் 75/0 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. துஷார் (27), ஜெகதீசன் (46) அவுட்டாகாமல் இருந்தனர். 'டி' பிரிவில் தமிழக அணி, இதுவரை பங்கேற்ற 5 போட்டியில் 3 வெற்றி, 1 தோல்வியுடன் (1 ரத்து) 14 புள்ளி எடுத்து, பட்டியலில் இரண்டாவதாக உள்ளது.

