/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தமிழக அணி வெற்றி: கூச் பெஹார் டிராபியில்
/
தமிழக அணி வெற்றி: கூச் பெஹார் டிராபியில்
ADDED : டிச 01, 2024 09:46 PM

ஐதராபாத்: கூச் பெஹார் டிராபி லீக் போட்டியில் தமிழக அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.
ஐதராபாத்தில் நடந்த கூச் பெஹார் டிராபி கிரிக்கெட் 'சி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ஐதராபாத் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் ஐதராபாத் 222, தமிழகம் 294 ரன் எடுத்தன. ஐதராபாத் அணி 2வது இன்னிங்சில் 194 ரன் எடுத்தது. பின், 123 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி, 3ம் நாள் முடிவில் 2வது இன்னிங்சில் 22/0 ரன் எடுத்திருந்தது.
நான்காம் நாள் ஆட்டத்தில் தமிழக அணிக்கு ஸ்ரேனிக் (37), நவீன் (51*), அக்சய் (15*) கைகொடுத்தனர். தமிழக அணி 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 124 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தமிழக அணிக்கு 6 புள்ளி வழங்கப்பட்டது.
தமிழக அணி, தனது 5வது, கடைசி லீக் போட்டியில் (டிச. 6-9, திண்டுக்கல்) ஹரியானாவை எதிர்கொள்கிறது.