/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தமிழக அணிகள் ஏமாற்றம்: புச்சி பாபு அரையிறுதியில்
/
தமிழக அணிகள் ஏமாற்றம்: புச்சி பாபு அரையிறுதியில்
ADDED : செப் 05, 2024 09:47 PM

நத்தம்: புச்சி பாபு கிரிக்கெட் அரையிறுதியில் தமிழக அணிகள் ஏமாற்றின.
தமிழக கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.,) சார்பில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடக்கிறது. திண்டுக்கல், நத்தத்தில் நடந்த அரையிறுதியின் முதல் இன்னிங்சில் சத்தீஸ்கர் 467, டி.என்.சி.ஏ., லெவன் அணி 194 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் சத்தீஸ்கர் அணி 2வது இன்னிங்சில் 49/3 ரன் எடுத்திருந்தது.
கடைசி நாள் ஆட்டத்தில், சத்தீஸ்கர் அணிக்கு அமன்தீப் கரே (70), அனுஜ் திவாரி (40), ககன்தீப் சிங் (30) கைகொடுத்தனர். ஆட்டநேர முடிவில் சத்தீஸ்கர் அணி 2வது இன்னிங்சில் 207/8 ரன் எடுத்திருந்தது.
டி.என்.சி.ஏ., லெவன் அணியின் லக்சய் ஜெயின் 5 விக்கெட் சாய்த்தார். முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் சத்தீஸ்கர் பைனலுக்கு முன்னேறியது.
பைனலில் ஐதராபாத்: திருநெல்வேலியில் நடந்த அரையிறுதியின் முதல் இன்னிங்சில் ஐதராபாத் 313, டி.என்.சி.ஏ., பிரசிடென்ட் லெவன் அணி 327 ரன் எடுத்தன. மிலிந்து (53), ரவி தேஜா (42) கைகொடுக்க ஐதராபாத் அணி 2வது இன்னிங்சில் 273/9 ரன்னுக்கு 'டிக்ளேர்' செய்தது. டி.என்.சி.ஏ., பிரசிடென்ட் அணி சார்பில் முகமது 5 விக்கெட் வீழ்த்தினார்.
பின் 260 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டி.என்.சி.ஏ., பிரசிடென்ட் அணி 2வது இன்னிங்சில் 195 ரன்னுக்கு சுருண்டு 64 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ராதாகிருஷ்ணன் (40), மாதவ பிரசாத் (39), முகமது அலி (31) ஆறுதல் தந்தனர்.
ஐதராபாத் அணிக்கு தனய் தியாகராஜன் 5 விக்கெட் சாய்த்தார்.