/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தமிழக அணி இன்னிங்ஸ் வெற்றி: கூச் பெஹர் டிராபியில் கலக்கல்
/
தமிழக அணி இன்னிங்ஸ் வெற்றி: கூச் பெஹர் டிராபியில் கலக்கல்
தமிழக அணி இன்னிங்ஸ் வெற்றி: கூச் பெஹர் டிராபியில் கலக்கல்
தமிழக அணி இன்னிங்ஸ் வெற்றி: கூச் பெஹர் டிராபியில் கலக்கல்
ADDED : நவ 14, 2024 10:30 PM

தேனி: கூச் பெஹர் டிராபி லீக் போட்டியில் அசத்திய தமிழக அணி இன்னிங்ஸ், 104 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தேனி அருகே தப்புக்குண்டில் உள்ள தமிழக கிரிக்கெட் சங்க கிரிக்கெட் மைதானத்தில், 19 வயதுக்குட்பட்டோருக்கான கூச் பெஹர் டிராபி 'சி' பிரிவு லீக் போட்டி நடந்தது. இதில் தமிழகம், கோவா அணிகள் மோதின. முதல் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 287/7 ரன் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் திபேஷ் (26) ஓரளவு கைகொடுக்க தமிழக அணி முதல் இன்னிங்சில் 315 ரன் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய கோவா அணி 127 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. தமிழகம் சார்பில் ஹெம்சுதேஷன், பிரவின் தலா 4 விக்கெட் சாய்த்தனர்.
முதல் இன்னிங்சில் 188 ரன் முன்னிலையில் இருந்த தமிழக அணி, கோவா அணிக்கு 'பாலோ-ஆன்' வழங்கியது. இரண்டாவது இன்னிங்சிலும் சொதப்பிய கோவா அணி 84 ரன்னுக்கு சுருண்டு, தோல்வியடைந்தது. தமிழகம் சார்பில் ஹெம்சுதேஷன் 4, பிரவின், கிஷோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.