/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தீப்தி 'சிக்சர்'... லண்டன் 'சூப்பர்' * முதல் முறையாக சாம்பியன்
/
தீப்தி 'சிக்சர்'... லண்டன் 'சூப்பர்' * முதல் முறையாக சாம்பியன்
தீப்தி 'சிக்சர்'... லண்டன் 'சூப்பர்' * முதல் முறையாக சாம்பியன்
தீப்தி 'சிக்சர்'... லண்டன் 'சூப்பர்' * முதல் முறையாக சாம்பியன்
ADDED : ஆக 19, 2024 11:21 PM

லார்ட்ஸ்: தீப்தி சர்மா சிக்சர் விளாச, 'தி ஹண்டிரடு' தொடரில் லண்டன் அணி சாம்பியன் ஆனது.
இங்கிலாந்தில் பெண்களுக்கான 'தி ஹண்டிரடு' தொடர் (100 பந்து) நடந்தது. இதன் பைனலில் லண்டன் ஸ்பிரிட், வேல்ஸ் பயர் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற லண்டன் அணி பீல்டிங் தேர்வு செய்தது. லண்டன் அணிக்காக இந்தியாவின் தீப்தி சர்மா விளையாடினார்.
ஜோனாசென் அரைசதம்
வேல்ஸ் அணிக்கு சோபியா (2), கேப்டன் டாமி பியுமண்ட் (21) ஜோடி துவக்கம் கொடுத்தது. ஹேலே மாத்யூஸ் 22 ரன் எடுத்து கைகொடுத்தார். பின் வந்த வீராங்கனைகள் ஒற்றை இலக்கில் அவுட்டாக, ஜெஸ் ஜோனாசென் (54) அரைசதம் விளாசி கைகொடுத்தார். வேல்ஸ் அணி 100 பந்தில் 8 விக்கெட்டுக்கு 115 ரன் எடுத்தது.
லண்டன் அணி சார்பில் சாரா, ஈவா தலா 2, தீப்தி சர்மா 1 விக்கெட் சாய்த்தனர்.
தீப்தி அபாரம்
லண்டன் அணிக்கு மெக் லானிங் (4), ஜார்ஜியா (34) ஜோடி துவக்கம் தர, கிரிப்த் 10 ரன் எடுத்தார். கேப்டன் ஹீதர் நைட் (24), டேனியலி (22) கைகொடுத்தனர். லண்டன் அணியின் வெற்றிக்கு கடைசி 5 பந்தில் 6 ரன் தேவைப்பட்டன. ஹேலே வீசிய முதல் 2 பந்தில் 2 ரன் எடுக்கப்பட்டன. 3வது பந்தை எதிர்கொண்ட தீப்தி சர்மா (16 ரன்) சிக்சர் அடிக்க, லண்டன் அணி 98 பந்தில் 118/6 ரன் எடுத்து வெற்றி பெற்று, முதன் முறையாக சாம்பியன் ஆனது.
ஓவல் கலக்கல்
ஆண்களுக்கான 'தி ஹண்டிரடு' தொடர் பைனலில் ஓவல் இன்விசிபிள் (147/9), சவுத்தர்ன் பிரேவ் (130/7) அணிகள் மோதின. இதில் ஓவல் அணி 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.

