/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஒரே ஒரு தோனி தான் * துருவ் ஜுரல் மகிழ்ச்சி
/
ஒரே ஒரு தோனி தான் * துருவ் ஜுரல் மகிழ்ச்சி
ADDED : மார் 15, 2024 09:14 PM

புதுடில்லி: ''கிரிக்கெட்டில் ஒரே ஒரு தோனி தான். அவர் 'ஜாம்பவான்'. நான் எப்போதும் நானாகவே இருக்க விரும்புகிறேன்,'' என துருவ் ஜுரல் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி விக்கெட் கீப்பர் துருவ் ஜுரல் 23. இங்கிலாந்துக்கு எதிரான ராஞ்சி டெஸ்டில் 90, 39 ரன் எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தார். விக்கெட் கீப்பிங்கில் அசத்தும் இவர், 'டி.ஆர்.எஸ்.,' அப்பீல் குறித்து கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பெரிய உதவியாக உள்ளார். 'இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தோனி,' என இவரை முன்னாள் கேப்டன் கவாஸ்கர் பாராட்டினார். இதுகுறித்து துருவ் கூறியது:
தோனியுடன் என்னை ஒப்பிட்டு பேசியதற்காக கவாஸ்கருக்கு நன்றி. ஆனால் தோனி நிகழ்த்திய சாதனைகளை யாரும் செய்து விட முடியாது. இப்போதும், எப்போதும், ஒரே ஒரு தோனி தான். தோனி என்றால் அவர் மட்டும் தான். ஏனெனில் கிரிக்கெட்டில் அவர் 'ஜாம்பவான்'. என்னைப் பொறுத்தவரையில் நான் நானாகவே இருக்க வேண்டும். நான் என்ன செய்தாலும், அது துருவ் செய்ததாகவே இருக்க விரும்புகிறேன்.
மற்றபடி ஐ.பி.எல்., போட்டி டெஸ்ட் ஆர்வத்தை குறைத்து விடுவதாகத் தெரியவில்லை. முதன் முதலில் இந்திய அணிக்காக தொப்பியை பெற்ற போது, கிடைத்த உணர்வு வித்தியாசமானது. டெஸ்ட் போட்டி முற்றிலும் வித்தியாசமானது.
இவ்வாறு அவர் கூறினார்.

