/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
திலக் வர்மா புதிய திட்டம்: இங்கிலாந்து பவுலர்களுக்கு நெருக்கடி
/
திலக் வர்மா புதிய திட்டம்: இங்கிலாந்து பவுலர்களுக்கு நெருக்கடி
திலக் வர்மா புதிய திட்டம்: இங்கிலாந்து பவுலர்களுக்கு நெருக்கடி
திலக் வர்மா புதிய திட்டம்: இங்கிலாந்து பவுலர்களுக்கு நெருக்கடி
ADDED : ஜன 26, 2025 09:43 PM

சென்னை: ''இங்கிலாந்து பவுலர்களுக்கு நெருக்கடி தர, ஆர்ச்சர் பந்துவீச்சை விளாசினேன்,'' என, இந்தியாவின் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. சென்னை, சேப்பாக்கத்தில் நடந்த 2வது போட்டியில் திலக் வர்மாவின் அரைசதம் கைகொடுக்க, இந்திய அணி கடைசி ஓவரில் 2 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.
இப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற இந்தியாவின் திலக் வர்மா, 55 பந்தில், 72 ரன் (5 சிக்சர், 4 பவுண்டரி) எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதில் இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் மட்டும் 30 ரன் (4 சிக்சர், ஒரு பவுண்டரி) குவித்தார். 'வேகத்தில்' ஏமாற்றிய ஆர்ச்சர், 4 ஓவரில், 60 ரன் விட்டுக்கொடுத்து, ஒரு விக்கெட் மட்டும் கைப்பற்றினார்.
இதுகுறித்து திலக் வர்மா கூறுகையில், ''இங்கிலாந்தின் சிறந்த பவுலரான ஆர்ச்சருக்கு எதிராக ரன் குவிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் களமிறங்கினேன். இதன்மூலம் அந்த அணியின் மற்ற பவுலர்களுக்கு நெருக்கடி தர விரும்பினேன். இதற்காக வலைப்பயிற்சியின் போது ஆர்ச்சர் பந்துவீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என பயிற்சி மேற்கொண்டேன். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. நான் அதிரடியாக விளையாடியது, எங்கள் அணியின் மற்ற பேட்டர்களுக்கும் உதவியது,'' என்றார்.

