/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
டி.என்.பி.எல்., இன்று துவக்கம் * கோவை-சேப்பாக்கம் பலப்பரீட்சை
/
டி.என்.பி.எல்., இன்று துவக்கம் * கோவை-சேப்பாக்கம் பலப்பரீட்சை
டி.என்.பி.எல்., இன்று துவக்கம் * கோவை-சேப்பாக்கம் பலப்பரீட்சை
டி.என்.பி.எல்., இன்று துவக்கம் * கோவை-சேப்பாக்கம் பலப்பரீட்சை
ADDED : ஜூலை 04, 2024 11:56 PM

சென்னை: டி.என்.பி.எல்., தொடரின் 8வது சீசன் இன்று துவங்குகிறது. சேலத்தில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கோவை, சேப்பாக்கம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தமிழக கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் டி.என்.பி.எல்., தொடர் நடத்தப்படுகிறது. இதன் 8வது சீசன் இன்று சேலத்தில் துவங்குகிறது. மொத்தம் 8 அணிகள், 'ரவுண்டு ராபின்' முறையில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் 'டாப்-4' இடம் பெறும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறும். மொத்தம் 32 போட்டி நடக்கவுள்ளன.
லீக் போட்டிகள் சேலத்தில் இன்று முதல் ஜூலை 11 வரை நடக்கும். அடுத்து கோவை (ஜூலை 13-18), நெல்லை (ஜூலை 20-24), திண்டுக்கல்லில் (ஜூலை 26-28) நடக்கும்.
சென்னையில் பைனல்
தகுதிச்சுற்று 1, 'எலிமினேட்டர்' போட்டி திண்டுக்கல்லில் (ஜூலை 30, 31) நடக்கும். 2வது தகுதிச்சுற்று (ஆக. 2), பைனல் (ஆக. 4) சென்னையில் நடக்க உள்ளன.
போட்டிகளை நேரடியாக காண, 'பேடிஎம் இன்சைடர்' செயலி, மைதான கவுண்டர்களில் டிக்கெட்டுகள் பெறலாம்.