/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சாதனை முறியடிப்பதற்கே: முல்டருக்கு லாரா 'அட்வைஸ்'
/
சாதனை முறியடிப்பதற்கே: முல்டருக்கு லாரா 'அட்வைஸ்'
ADDED : ஜூலை 11, 2025 10:20 PM

ஜோகனஸ்பர்க்: புலவாயோவில் நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வென்றது. இதில் தென் அணிக்கு கேப்டனாக வியான் முல்டர் செயல்பட்டார். இவர், 367 ரன் எடுத்திருந்த போது முதல் இன்னிங்சை திடீரென 'டிக்ளேர்' செய்தார். இவர், இன்னும் 34 ரன் எடுத்திருந்தால், டெஸ்ட் அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாராவை (400*) முந்தி முதலிடம் பிடித்திருக்கலாம்.
இதற்கு, 'ஜாம்பவான் லாரா வசமே சாதனை இருக்கட்டும்,'' என, முல்டர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முல்டருக்கு, லாரா ஆலோசனை வழங்கினார். இதுகுறித்து முல்டர் கூறுகையில், ''சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டியவை. அடுத்த முறை வாய்ப்பு கிடைத்தால் வீணடித்துவிடக் கூடாது என்று லாரா என்னிடம் தெரிவித்தார். இதுபோன்ற ஆலோசனையை அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் நான் செய்தது சரிதான் என்று நம்புகிறேன்,'' என்றார்.

