/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
விஜய் சங்கர், சித்தார்த் அரைசதம்: தமிழக அணி ரன் குவிப்பு
/
விஜய் சங்கர், சித்தார்த் அரைசதம்: தமிழக அணி ரன் குவிப்பு
விஜய் சங்கர், சித்தார்த் அரைசதம்: தமிழக அணி ரன் குவிப்பு
விஜய் சங்கர், சித்தார்த் அரைசதம்: தமிழக அணி ரன் குவிப்பு
ADDED : நவ 06, 2024 09:35 PM

கவுகாத்தி: அசாம் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழகத்தின் விஜய் சங்கர், ஆன்ட்ரி சித்தார்த் அரைசதம் கடந்தனர்.
அசாமின் கவுகாத்தியில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'டி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், அசாம் அணிகள் விளையாடுகின்றன. 'டாஸ்' வென்ற அசாம் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
தமிழக அணிக்கு சுரேஷ் லோகேஷ்வர் (8), நாராயண் ஜெகதீசன் (5) ஜோடி ஏமாற்றியது. பிரதோஷ் ரஞ்சன் பால் (27) நிலைக்கவில்லை. பின் இணைந்த விஜய் சங்கர், ஆன்ட்ரி சித்தார்த் அரைசதம் விளாசினர். நான்காவது விக்கெட்டுக்கு 98 ரன் சேர்த்த போது விஜய் சங்கர் (76) அவுட்டானார். ஷாருக்கான் (28) சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய சித்தார்த் 94 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் சாய் கிஷோர் (3) சொற்ப ரன்னில் அவுட்டானார்.
ஆட்டநேர முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 299 ரன் எடுத்திருந்தது. முகமது அலி (27), சோனு யாதவ் (12) அவுட்டாகாமல் இருந்தனர். அசாம் சார்பில் ராகுல் சிங், ஸ்வரூபம், தர்ஷன் ராஜ்போங்ஷி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.