/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வெஸ்ட் இண்டீஸ் ஆறுதல் வெற்றி * கோப்பை வென்றது ஆஸி.,
/
வெஸ்ட் இண்டீஸ் ஆறுதல் வெற்றி * கோப்பை வென்றது ஆஸி.,
வெஸ்ட் இண்டீஸ் ஆறுதல் வெற்றி * கோப்பை வென்றது ஆஸி.,
வெஸ்ட் இண்டீஸ் ஆறுதல் வெற்றி * கோப்பை வென்றது ஆஸி.,
ADDED : பிப் 13, 2024 05:54 PM

பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது 'டி-20'ல் 37 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்.
ஆஸ்திரேலியா சென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. மூன்றாவது, கடைசி போட்டி பெர்த்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
ரசல் விளாசல்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சார்லஸ் (4), மேயர்ஸ் (11) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. நிகோலஸ் பூரன் (1) ஏமாற்றினார். ராஸ்டன் சேஸ் (37), கேப்டன் பாவெல் (21) சற்று உதவினர். பின் இணைந்த ஆன்ட்ரி ரசல், ரூதர்போர்டு ஜோடி சிக்சர் மழை பொழிந்தது. ஜாம்பா வீசிய 19 வது ஓவரில் ரசல், 28 ரன் (6, 0, 4, 6, 6, 6) விளாசினார்.
6 வது விக்கெட்டுக்கு 68 பந்தில் 139 ரன் சேர்த்த போது 71 ரன் எடுத்த ரசல் (29 பந்து, 7 சிக்சர், 4 பவுண்டரி) அவுட்டானார். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 220/6 ரன் குவித்தது. ரூதர்போர்டு (67 ரன், 40 பந்து), ஷெப்பர்டு (2) அவுட்டாகாமல் இருந்தனர்.
வார்னர் அரைசதம்
கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் மிட்சல் மார்ஷ் (17), வார்னர் ஜோடி துவக்கம் தந்தது. ஹார்டி (16) கைவிட்ட போதும் வார்னர், 81 ரன் (49 பந்து) எடுத்து நம்பிக்கை தந்தார். இங்லிஸ் (1) கைவிட, மேக்ஸ்வெல் (12) போல்டானார். டிம் டேவிட் (41*), வேட் (7) அவுட்டாகாமல் போராடிய போதும், ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 183/5 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
இருப்பினும் 2-1 என தொடரை கைப்பற்றி, கோப்பை கொண்டு சென்றது.