/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வெஸ்ட் இண்டீஸ் அபாரம்: 164 ரன்னுக்கு சுருண்டது வங்கம்
/
வெஸ்ட் இண்டீஸ் அபாரம்: 164 ரன்னுக்கு சுருண்டது வங்கம்
வெஸ்ட் இண்டீஸ் அபாரம்: 164 ரன்னுக்கு சுருண்டது வங்கம்
வெஸ்ட் இண்டீஸ் அபாரம்: 164 ரன்னுக்கு சுருண்டது வங்கம்
ADDED : டிச 02, 2024 10:59 PM

கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. இரண்டாவது டெஸ்ட் கிங்ஸ்டனில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 69/2 ரன் எடுத்திருந்தது.
2ம் நாள் ஆட்டத்தில் ஷாத்மன் இஸ்லாம் (64), கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் (36) கைகொடுக்க வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 164 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 2ம் நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 70 ரன் எடுத்திருந்தது. கேப்டன் கிரெய்க் பிராத்வைட் (33), கீசி கார்டி (19) அவுட்டாகாமல் இருந்தனர்.