/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வெஸ்ட் இண்டீஸ் அபாரம்: வங்கதேசத்தை வீழ்த்தியது
/
வெஸ்ட் இண்டீஸ் அபாரம்: வங்கதேசத்தை வீழ்த்தியது
ADDED : டிச 09, 2024 10:59 PM

செயின்ட் கிட்ஸ்: முதல் ஒருநாள் போட்டியில் ரூதர்போர்டு சதம் கடந்து கைகொடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள வங்கதேச அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி செயின்ட் கிட்சில் நடந்தது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த வங்கதேச அணிக்கு தன்சித் ஹசன் (60) நல்ல துவக்கம் கொடுத்தார். கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் (74), மஹ்முதுல்லா (50*) அரைசதம் விளாசினர். வங்கதேச அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 294 ரன் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 3, அல்சாரி ஜோசப் 2 விக்கெட் சாய்த்தனர்.
சவாலான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங் (9), எவின் லீவிஸ் (16), கீசி கார்டி (21) ஏமாற்றினர். கேப்டன் ஷாய் ஹோப் (86) நம்பிக்கை தந்தார். அபாரமாக ஆடிய ஷெர்பேன் ரூதர்போர்டு (113) சதம் கடந்து கைகொடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 47.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 295 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஜஸ்டின் கிரீவ்ஸ் (41), ராஸ்டன் சேஸ் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை ரூதர்போர்டு வென்றார். இரண்டாவது போட்டி செயின்ட் கிட்சில் இன்று நடக்கிறது.