
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிட்னி: ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியானது. முதல் போட்டி, அடுத்த ஆண்டு நவ. 21ல் பெர்த்தில் துவங்குகிறது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. கடைசியாக, கடந்த ஆண்டு இவ்விரு அணிகள் மோதின. ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் 2-2 என சமன் ஆனது. இருப்பினும் 'நடப்பு சாம்பியன்' அடிப்படையில் ஆஸ்திரேலியா கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடருக்கான அட்டவணையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) வெளியிட்டது. இதன்படி முதல் டெஸ்ட், பெர்த்தில் 2025, நவ. 21-25ல் நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் பிரிஸ்பேன் (டிச. 4-8, பகலிரவு), அடிலெய்டு (டிச. 17-21), மெல்போர்ன் (டிச. 26-30, 'பாக்சிங் டே'), சிட்னியில் (2026, ஜன. 4-8) நடக்கவுள்ளன.