/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வியான் முல்டர் இரட்டை சதம்: தென் ஆப்ரிக்கா ரன் குவிப்பு
/
வியான் முல்டர் இரட்டை சதம்: தென் ஆப்ரிக்கா ரன் குவிப்பு
வியான் முல்டர் இரட்டை சதம்: தென் ஆப்ரிக்கா ரன் குவிப்பு
வியான் முல்டர் இரட்டை சதம்: தென் ஆப்ரிக்கா ரன் குவிப்பு
ADDED : ஜூலை 06, 2025 11:42 PM

புலவாயோ: இரண்டாவது டெஸ்டில் தென் ஆப்ரிக்க கேப்டன் வியான் முல்டர் இரட்டை சதம் விளாசினார்.
ஜிம்பாப்வே சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வென்றது. நேற்று, 2வது டெஸ்ட் புலவாயோவில் துவங்கியது. 'டாஸ்' வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் எர்வின் 'பவுலிங்' தேர்வு செய்தார்.
தென் ஆப்ரிக்க அணிக்கு டோனி டி ஜோர்ஜி (10), லெசெகோ செனோக்வானே (3) ஏமாற்றினர். பின் இணைந்த கேப்டன் வியான் முல்டர், டேவிட் பெடிங்ஹாம் ஜோடி கைகொடுத்தது. பெடிங்ஹாம் அரைசதம் கடந்தார். மறுமுனையில் அசத்திய முல்டர், டெஸ்ட் அரங்கில் தனது 3வது சதத்தை பதிவு செய்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 184 ரன் சேர்த்த போது டனகா சிவாங்கா பந்தில் பெடிங்ஹாம் (82) அவுட்டானார்.
தொடர்ந்து அசத்திய முல்டர், சிவாங்கா பந்தை பவுண்டரிக்கு அனுப்பி 150 ரன்னை எட்டினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த லுவான் பிரிட்டோரியஸ், தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார். வெலிங்டன் மசகட்சா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய முல்டர், டெஸ்ட் அரங்கில் முதன்முறையாக இரட்டை சதம் அடித்தார்.
ஆட்டநேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி 3 விக்கெட்டுக்கு 419* ரன் எடுத்திருந்தது. முல்டர் (236*), பிரிட்டோரியஸ் (78*) அவுட்டாகாமல் இருந்தனர்.