sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

கேப்டனாக மீண்டும் சாதிப்பாரா தோனி: சென்னை-கோல்கட்டா மோதல்

/

கேப்டனாக மீண்டும் சாதிப்பாரா தோனி: சென்னை-கோல்கட்டா மோதல்

கேப்டனாக மீண்டும் சாதிப்பாரா தோனி: சென்னை-கோல்கட்டா மோதல்

கேப்டனாக மீண்டும் சாதிப்பாரா தோனி: சென்னை-கோல்கட்டா மோதல்

5


ADDED : ஏப் 10, 2025 11:29 PM

Google News

ADDED : ஏப் 10, 2025 11:29 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் அவதாரம் எடுக்கிறார் தோனி. களத்தில் 'கூலாக' செயல்பட்டு, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்ல உள்ளார். காயம் காரணமாக ருதுராஜ் நீக்கப்பட்டார். இன்றைய கோல்கட்டா அணிக்கு எதிரான போட்டியில் இருந்து 'தலைவனாக' தோனியை பார்க்கலாம்.

சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் பிரிமியர் லீக் போட்டியில் சென்னை, 'நடப்பு சாம்பியன்' கோல்கட்டா அணிகள் மோத உள்ளன.

ருதுராஜ் காயம்: கேப்டன் ருதுராஜ் நீக்கப்பட்டது சென்னைக்கு பெரும் அதிர்ச்சி. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் (கடந்த மார்ச் 30) துஷார் தேஷ்பாண்டே வீசிய பந்து தாக்கியதில் இவரது வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதை பொருட்படுத்தாது டில்லி, பஞ்சாப் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்றார். வலி அதிகரிக்கவே மீண்டும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.

இது பற்றி சென்னை பயிற்சியாளர் பிளமிங் கூறுகையில்,''ருதுராஜ் வலியுடன் விளையாடி வந்தார். 'எக்ஸ்-ரே'யில் பாதிப்பை துல்லியமாக கண்டறிய முடியவில்லை. எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பரிசோதனையில் முழங்கை பகுதியில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இது ஏமாற்றம் அளித்தது. எஞ்சிய தொடரில் இருந்து ருதுராஜ் நீக்கப்படுகிறார். வரும் போட்டிகளில் கேப்டன் பொறுப்பை தோனி ஏற்பார். இக்கட்டான தருணத்தில், அணியை வழிநடத்த ஒப்புக் கொண்டார். ருதுராஜுக்கு பதில் வேறு வீரரை கண்டறிய வேண்டும்,'' என்றார்.

கான்வே நம்பிக்கை: சென்னை அணி 5 போட்டியில், 4 தோல்விகளுடன் பரிதாபமாக உள்ளது. ருதுராஜ் இல்லாதது பலவீனம். பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் ரச்சின், கான்வே நல்ல துவக்கம் தந்தனர். இவர்களது அதிரடி தொடர வேண்டும். 'மிடில் ஆர்டரில்' ஷிவம் துபே, தமிழக வீரர் விஜய் சங்கர், ஜடேஜா எழுச்சி கண்டால் நல்லது. பஞ்சாப் பந்துவீச்சை பதம் பார்த்த தோனி (12 பந்தில் 27 ரன், 3X6, 1X4), இன்றும் 'பினிஷிங்' பணியை கச்சிதமாக செய்ய வேண்டும்.சேப்பாக்கத்தில் 'சுழல்' புயலாக மிரட்ட தமிழகத்தின் அஷ்வின், ஜடேஜா, நுார் அகமது உள்ளனர். 'வேகத்தில்' பதிரனா, கலீல் அகமது, முகேஷ் சவுத்ரி அசத்தலாம்.

வருண் 'சுழல்' ஜாலம்: கோல்கட்டா அணி 5 போட்டியில் 3 தோல்வியை சந்தித்துள்ளது. லக்னோவுக்கு எதிரான கடந்த போட்டியில் 234 ரன்னை எட்டிய போதும், 4 ரன்னில் தோற்றது. துவக்கத்தில் குயின்டன் தடுமாறுகிறார். கேப்டன் ரகானே, வெங்கடேஷ் நல்ல 'பார்மில்' இருப்பது பலம். 'ஆல்-ரவுண்டர்' ரசல் ஆட்டம் எடுபடாதது பலவீனம். கடைசி கட்டத்தில் விளாச, ரிங்கு சிங் உள்ளார்.

'சுழல் மாயாவி' தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் சாகசம் நிகழ்த்தலாம். 'வேகத்தில்' ஹர்ஷித் ராணா, ஸ்பென்சர் ஜான்சன் மிரட்டலாம்.

யார் ஆதிக்கம்

இரு அணிகளும் 30 முறை மோதின. சென்னை 19, கோல்கட்டா 10ல் வென்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. சேப்பாக்கத்தில் 11 போட்டியில் மோதின. சென்னை 8, கோல்கட்டா 3ல் வென்றன.

மழை வருமா

சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். மழைக்கு வாய்ப்பு இல்லை.

* சேப்பாக்கம் ஆடுகளம் 'ஸ்பின்னர்'களுக்கு சாதகமாக இருக்கும்.

வரலாறு திரும்புமா

சென்னை அணிக்கு 235 போட்டிகளில் கேப்டனாக இருந்த தோனி 142ல் வெற்றி தேடித் தந்தார். 90ல் தோல்வி, 2 போட்டிக்கு முடிவு இல்லை. ஒரு போட்டி 'டை' ஆனது. 5 பிரிமியர் கோப்பை (2010, 11, 18, 21, 23), 2 சாம்பியன்ஸ் லீக் பட்டங்களை (2010, 14) வென்று தந்தார். கேப்டனாக 235 போட்டியில் 4794 ரன் எடுத்துள்ளார்.

* கடைசியாக 2023ல் சென்னை அணி கோப்பை வென்ற போது கேப்டனாக இருந்தார். 2024ல் தலைமை பதவியை ருதுராஜிடம் ஒப்படைத்தார். நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும் கேப்டனாக களமிறங்க உள்ளார் தோனி.

* 2010ல் சென்னை அணி தொடர்ந்து 4 லீக் போட்டிகளில் தோற்றது. 7 போட்டிகளில் 2ல் தான் வென்றது. பின் கேப்டனாக தோனி 'மேஜிக்' நிகழ்த்த, முதல் கோப்பை வென்றது. இதே போன்று இம்முறை தோனி தலைமையில் சென்னை அசத்துமா...

யாருக்கு வாய்ப்பு

'டாப்-ஆர்டரில்' ருதுராஜ் இல்லாதது பின்னடைவு. இம்முறை சென்னை சார்பில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் (5 போட்டி, 122 ரன், ஸ்டிரைக் ரேட் 150.61) உள்ளார். இவருக்கு பதில் இன்று திரிபாதி அல்லது தீபக் ஹூடா இடம் பெறலாம். அதிரடி பேட்டர், கீப்பர் இளம் வன்ஷ் பேடிக்கு 22, வாய்ப்பு அளித்து பார்க்கலாம். ருதுராஜ் நீக்கப்பட்ட நிலையில், மாற்று வீரர் ஓருவரை சென்னை அணி தேர்வு செய்யலாம். மும்பை 'டீன் ஏஜ்' வீரர் ஆயுஷ் மாத்ரே சேர்க்கப்படலாம்.

கங்குலி ஆதரவு

இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி கூறுகையில்,''சென்னை அணிக்கு கேப்டன் அந்தஸ்தில் தான் தோனி விளையாட வேண்டும். கேப்டனாக அவர் செயல்படும் விதம் வேற லெவல். 43 வயதிலும் வலிமையாக உள்ளார். டில்லிக்கு எதிராக 3 சிக்சர் விளாசி திறமை நிரூபித்தார்,''என்றார்.






      Dinamalar
      Follow us