sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் நடக்குமா: ரோகித் சர்மா ஆசை நிறைவேறுமா

/

இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் நடக்குமா: ரோகித் சர்மா ஆசை நிறைவேறுமா

இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் நடக்குமா: ரோகித் சர்மா ஆசை நிறைவேறுமா

இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் நடக்குமா: ரோகித் சர்மா ஆசை நிறைவேறுமா


ADDED : ஏப் 18, 2024 10:56 PM

Google News

ADDED : ஏப் 18, 2024 10:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ''இந்தியா-பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் மோதல் சுவாரஸ்யமாக இருக்கும். இதில் விளையாட ஆர்வமாக உள்ளேன்,'' என ரோகித் சர்மா தெரிவித்தார்.

மும்பை பயங்கரவாத தாக்குதலில்(2008) 150 பேர் பலியாகினர். இதற்கு பின் இந்தியா-பாகிஸ்தான் இடையே நல்லுறவு இல்லை. இரு தரப்பு கிரிக்கெட் தொடர் நடக்கவில்லை. இரு அணிகளும் பொதுவான இடத்தில் ஐ.சி.சி., தொடரில் மட்டும் விளையாடின. கடந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்ல இந்தியா மறுத்தது. இதையடுத்து பாகிஸ்தான் மண்ணில் இந்தியா விளையாட இருந்த போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டன.

மத்திய அரசு மறுப்பு

அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடக்க உள்ளது. இதில் இந்தியாவுக்காக இடத்தை மாற்ற முடியாது என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஐ.சி.சி.,க்கு அரசின் அனுமதியே முக்கியம். எந்த அணியையும் நிர்ப்பந்திக்காது. மத்திய அரசை பொறுத்தவரை பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட இதுவரை அனுமதி அளிக்கவில்லை.

இந்தச் சூழலில், இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா போன்ற பொதுவான இடத்தில் இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் மோதலை நடத்துவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து முன்னாள் வீரர்களான கில்கிறிஸ்ட்(ஆஸி.,), மைக்கேல் வானுக்கு (இங்கி.,) இந்திய கேப்டன்

ரோகித் சர்மா அளித்த பேட்டி: பொதுவான இடத்தில் பாகிஸ்தான் உடன் டெஸ்டில் பங்கேற்பதில் எனக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. பாகிஸ்தான் அணியில் ஷாகீன் ஷா அப்ரிதி, நசீம் ஷா, ஆமர் ஜமால் உள்ளிட்ட 'வேகப்புயல்கள்' உள்ளனர். பலமான பந்துவீச்சு இருப்பதால், சிறந்த அணியாக திகழ்கிறது. பாகிஸ்தானுடன் கடைசியாக 2007-08ல் டெஸ்டில் பங்கேற்றோம். மீண்டும் டெஸ்ட் விளையாட ஆர்வமாக உள்ளேன். இரு அணிகளுக்கும் இடையிலான மோதல் சுவாரஸ்யமானதாக இருக்கும். நான் முழுவதும் கிரிக்கெட்டையே குறிப்படுகிறேன். வேறு விஷயங்களை புகுத்த வேண்டாம். இங்கு பேட், பந்துக்கு மட்டுமே பங்கு உண்டு.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

விதி செய்யும் சதி

ஐ.பி.எல்., தொடரில் 'இம்பேக்ட்' வீரர் விதிமுறைப்படி, போட்டியின் சூழலுக்கு ஏற்ப பேட்டர்/பவுலரை மாற்று வீரராக களமிறக்கலாம். இது குறித்து ரோகித் சர்மா கூறுகையில்,''கிரிக்கெட் என்பது 11 பேர் விளையாடும் ஆட்டம். 'இம்பேக்ட்' வீரர் விதிப்படி 12 பேருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. இதில் உடன்பாடு இல்லை. இந்தியாவில் 'ஆல்-ரவுண்டர்கள்' வளர்ச்சியை பாதிக்கிறது. வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே போன்றவர்களின் பவுலிங் திறமையை கண்டறிய முடியவில்லை. 'இம்பேக்ட்' விதி காரணமாக 7-8 பேட்டர்கள் களமிறங்குகின்றனர். 2008-2023 வரை 250 ரன்னுக்கு மேல் இரண்டு முறை மட்டுமே எடுக்கப்பட்டது. தற்போது ஒரே தொடரில்(2024) நான்கு முறை 250 ரன்னுக்கு மேல் எடுக்கப்பட்டுள்ளது,''என்றார்.



அமெரிக்காவில் தோனி

வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் 'டி-20' உலக கோப்பை தொடர் (ஜூன் 1-29) நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ரோகித் கூறுகையில்,''அணித் தேர்வு தொடர்பாக பயிற்சியாளர் டிராவிட், தேர்வுக்குழு தலைவர் அகார்கரை சந்திக்கவில்லை. இது போலியான செய்தி. துவக்க வீரர் பற்றி முடிவு செய்யவில்லை. ஐ.பி.எல்., தொடரில் தோனி, தினேஷ் கார்த்திக் அசத்துகின்றனர். தோனியை சமாதானம் செய்து உலக கோப்பை அணியில் சேர்ப்பது கடினம். அமெரிக்காவுக்கு வேறு பணிக்காக வரலாம். ஏனெனில் கோல்ப் விளையாட்டில் தோனி அதிக கவனம் செலுத்துகிறார். தினேஷ் கார்த்திக்கை எளிதாக சமாதானம் செய்யலாம். காயத்தில் இருந்து ரிஷாப் பன்ட் மீண்டு வந்ததில் மகிழ்ச்சி. ஜாலியான மனிதர். என்னை சிரிக்க வைப்பதில் வல்லவர்,''என்றார்.

ஒரு மணி நேரம்...

மும்பை அணி கேப்டன் பதவி பறிப்புக்கு பின் ரோகித் சர்மா 'ரிலாக்சாக' உள்ளார். இவர் கூறுகையில்,''மும்பையில் நடந்த நான்கு போட்டிகளின் போது பெரும்பாலான நேரம் வீட்டிலேயே இருந்தேன். குடும்பத்துடன் பொழுதை போக்கினேன். போட்டி துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக மைதானத்திற்கு சென்றேன். இது வித்தியாசமான அனுபவமாக இருந்தது,''என்றார்.






      Dinamalar
      Follow us