/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இலங்கையை சமாளிக்குமா நியூசிலாந்து: 'விறுவிறு' கட்டத்தில் காலே டெஸ்ட்
/
இலங்கையை சமாளிக்குமா நியூசிலாந்து: 'விறுவிறு' கட்டத்தில் காலே டெஸ்ட்
இலங்கையை சமாளிக்குமா நியூசிலாந்து: 'விறுவிறு' கட்டத்தில் காலே டெஸ்ட்
இலங்கையை சமாளிக்குமா நியூசிலாந்து: 'விறுவிறு' கட்டத்தில் காலே டெஸ்ட்
ADDED : செப் 22, 2024 09:52 PM

காலே: காலே டெஸ்ட் 'விறுவிறு' கட்டத்தை எட்டியுள்ளது. இதில் வெற்றி பெற நியூசிலாந்துக்கு 68 ரன், இலங்கைக்கு 2 விக்கெட் தேவைப்படுகிறது.
இலங்கை சென்றுள்ள நியூசிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை 305, நியூசிலாந்து 340 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி 2வது இன்னிங்சில் 237/4 ரன் எடுத்திருந்தது. மாத்யூஸ் (34), தனஞ்செயா (34) அவுட்டாகாமல் இருந்தனர்.
நான்காம் நாள் ஆட்டத்தில் மாத்யூஸ் (50), கேப்டன் தனஞ்செயா டி சில்வா (40) கைகொடுக்க இலங்கை அணி 2வது இன்னிங்சில் 309/10 ரன் எடுத்தது. நியூசிலாந்து சார்பில் அசாஜ் படேல் 6 விக்கெட் சாய்த்தார்.
பின் 275 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டாம் லதாம் (28), கேன் வில்லியம்சன் (30), டாம் பிளன்டெல் (30) ஆறுதல் தந்தனர். பொறுப்பாக ஆடிய ரச்சின் ரவிந்திரா அரைசதம் கடந்தார். ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 207/8 ரன் எடுத்திருந்தது. ரச்சின் (91) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை சார்பில் ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
கடைசி நாளில் மீதமுள்ள 68 ரன்னை எடுக்கும் பட்சத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெறலாம். எஞ்சிய 2 விக்கெட்டை இலங்கை பவுலர்கள் விரைவில் கைப்பற்றினால் தொடரை வெற்றியுடன் துவக்கலாம்.