/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மீண்டும் சாதிப்பாரா விராத் கோலி: மெல்போர்ன் டெஸ்டில் எதிர்பார்ப்பு
/
மீண்டும் சாதிப்பாரா விராத் கோலி: மெல்போர்ன் டெஸ்டில் எதிர்பார்ப்பு
மீண்டும் சாதிப்பாரா விராத் கோலி: மெல்போர்ன் டெஸ்டில் எதிர்பார்ப்பு
மீண்டும் சாதிப்பாரா விராத் கோலி: மெல்போர்ன் டெஸ்டில் எதிர்பார்ப்பு
UPDATED : டிச 22, 2024 10:37 PM
ADDED : டிச 22, 2024 10:01 PM

மெல்போர்ன்: மெல்போர்ன் டெஸ்டில் விராத் கோலி மீண்டும் விஸ்வரூபம் எடுக்க காத்திருக்கிறார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர் -கவாஸ்கர்' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் (பாக்சிங் டே) வரும் டிச. 26ல் மெல்போர்னில் துவங்குகிறது.
இப்போட்டியில் இந்தியாவின் அனுபவ கோலி 36, ரன் மழை பொழியலாம். இவருக்கு மெல்போர்ன் மைதானம் ராசியானது. இங்கு 2022ல் நடந்த 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்தார். 53 பந்தில் 82 ரன் விளாசி, இந்திய அணிக்கு 'திரில்' வெற்றி தேடித் தந்தார். அப்போது அரங்கில் இருந்த 90,000 ரசிகர்கள் கோலி...கோலி என உற்சாக கோஷம் எழுப்பினர்.
முதலிடம் நோக்கி: டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை, மெல்போர்னில் 2011ல் 7வது இடத்தில் களமிறங்கிய கோலி, 11 ரன், 2 'கேட்ச்' பிடித்தார். 2014ல் முதல் இன்னிங்சில் சதம் (169) அடித்த இவர், நான்காவது விக்கெட்டுக்கு ரஹானேவுடன் (147) சேர்ந்து 262 ரன் சேர்த்தார். இரண்டாவது இன்னிங்சில் 54 ரன் எடுத்து, போட்டியை 'டிரா' செய்ய உதவினார். 2018ல் கேப்டனாக களமிறங்கிய கோலி, முதல் இன்னிங்சில் 82 ரன், இரண்டாவது இன்னிங்சில் மிட்சல் மார்ஷ், பின்ச் கொடுத்த 'கேட்ச்சை' பிடித்து, வெற்றிக்கு வித்திட்டார்.
மெல்போர்னில் அதிக ரன் எடுத்துள்ள இந்திய வீரர்களில் கோலி 3வது இடத்தில் உள்ளார். 3 டெஸ்டில் ஒரு சதம், இரு அரைசதம் உட்பட 316 ரன் (சராசரி 52.66) குவித்துள்ளார். முதல் இரு இடங்களில் சச்சின் (5 டெஸ்ட் 449 ரன்), ரஹானே (3 டெஸ்ட், 369 ரன்) உள்ளனர். சச்சினை முந்தி முதலிடம் பிடிக்க, கோலிக்கு 134 ரன் தேவை.
பிரபலமான வீரர்: தற்போதைய தொடரில், பெர்த்தில் சதம் (5, 100*) விளாசி வெற்றிக்கு உதவினார் கோலி. ஆனால், அடிலெய்டு (7, 11), பிரிஸ்பேன் (3) என இரு டெஸ்டிலும் சேர்த்து 21 ரன் தான் எடுத்தார். 3 போட்டியில் 126 ரன் எடுத்துள்ளார். நான்காவது டெஸ்ட் மெல்போர்னில் நடக்க இருப்பது இவருக்கு சாதகம். இங்கு கோலி மிகவும் பிரபலம். 'டிக்கெட் கவுன்ட்டரில்' கூட இவரது போட்டோவை காணலாம். இங்குள்ள அருங்காட்சியகத்தில் 2018-19ல் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை கோலி முத்தமிடும் படங்ளை பார்க்கலாம். தனக்கு பிடித்த மெல்போர்னில் இம்முறை கோலி சதம் விளாசி, இந்திய வெற்றிக்கு கைகொடுக்க வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.