வில்லியம்சன் ஓய்வு: சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து
வில்லியம்சன் ஓய்வு: சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து
ADDED : ஜூன் 12, 2026 11:07 PM

லண்டன்: சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து நியூசிலாந்தின் வில்லியம்சன் ஓய்வு பெற்றார்.
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் 35. 'டாப்-ஆர்டர்' பேட்டரான இவர், 2010ல் (ஆக. 10) தம்புலாவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். 40 டெஸ்ட் (22 வெற்றி, 8 'டிரா', 10 தோல்வி), 91 ஒருநாள் (46 வெற்றி, 40 தோல்வி, ஒரு 'டை', 4 முடிவு இல்லை), 75 சர்வதேச 'டி-20' (39 வெற்றி, 34 தோல்வி, ஒரு 'டை', ஒரு முடிவு இல்லை) போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தார் வில்லியம்சன். இவரது தலைமையில் 2021ல் நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது.
கடந்த ஆண்டு 'டி-20' போட்டியில் ஓய்வை அறிவித்த வில்லியம்சன், சமீபத்தில் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் (0, 18 ரன்) சோபிக்கவில்லை. இந்நிலையில் நேற்று, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
வில்லியம்சன், இதுவரை 110 டெஸ்ட் (9515 ரன், 33 சதம், 38 அரைசதம்), 175 ஒருநாள் (7256 ரன், 15 சதம், 47 அரைசதம்), 93 சர்வதேச 'டி-20' (2575 ரன், 18 அரைசதம்) போட்டிகளில் விளையாடி உள்ளார்.
வில்லியம்சன் கூறுகையில், ''சரியான நேரத்தில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளேன் என்று நினைக்கிறேன். கடந்த 16 ஆண்டுகளாக நியூசிலாந்துக்காக விளையாடியதை பெருமையாக கருதுகிறேன்,'' என்றார்.
