/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வென்றது வெஸ்ட் இண்டீஸ்: பப்புவா நியூ கினியா ஏமாற்றம்
/
வென்றது வெஸ்ட் இண்டீஸ்: பப்புவா நியூ கினியா ஏமாற்றம்
வென்றது வெஸ்ட் இண்டீஸ்: பப்புவா நியூ கினியா ஏமாற்றம்
வென்றது வெஸ்ட் இண்டீஸ்: பப்புவா நியூ கினியா ஏமாற்றம்
ADDED : ஜூன் 02, 2024 11:44 PM

கயானா: 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீசின் கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் மைதானத்தில் நடந்த 'டி-20' உலக கோப்பை 'சி' பிரிவு லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ்அணி'பீல்டிங்' தேர்வு செய்தது.
பப்புவா நியூ கினியா அணிக்கு டோனி உரா (2),லேகா சியாகா (1), ஹிரி (2)ஏமாற்றினர். கேப்டன் ஆசாத் வாலா(21) ஆறுதல் தந்தார். பொறுப்பாக ஆடியபாவ்50 ரன்னில் அவுட்டானார்.பப்புவா நியூ கினியா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 136 ரன் எடுத்தது. கிப்லின் (27), மோரியா (4) அவுட்டாகாமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரசல், ஜோசப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சுலப இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சார்லஸ் (0) ஏமாற்றினார். பூரன் (27), பிரண்டன் கிங் (34) ஓரளவு கைகொடுத்தனர். கேப்டன் பாவெல் (15) நிலைக்கவில்லை. பின் இணைந்த ராஸ்டன் சேஸ் (42*), ரசல் (14*) கைகொடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 19 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 137 ரன் எடுத்து வெற்றி பெற்றது.