/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
உலக சாம்பியன்களுடன் மோடி சந்திப்பு * பார்வையற்ற இந்திய வீராங்கனைகளுக்கு வாழ்த்து

ADDED : நவ 27, 2025 11:04 PM

புதுடில்லி: இந்தியா, இலங்கையில், பார்வையற்ற பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை முதல் சீசன் நடந்தது. 6 அணிகள் பங்கேற்றன. இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த பைனலில் இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தி முதன் முறையாக உலக சாம்பியன் ஆனது.
கோப்பை வென்ற இந்திய அணி வீராங்கனைகளை, நேற்று டில்லியில் பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, வீராங்கனைகள் உலக கோப்பையை காண்பித்து மகிழ்ந்தனர்.
கையெழுத்திட்ட பேட்டினை, மோடிக்கு பரிசளித்தனர். மோடி, தன் பங்கிற்கு பந்தில் கையெழுத்திட்டார். அடுத்து வீராங்கனைகளுக்கு தனது கையினால், லட்டு ஊட்டினார்.
இதுகுறித்து மோடி வெளியிட்ட செய்தி: முதன் முறையாக நடந்த பார்வையற்ற பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை தொடரில் சாதித்து வரலாறு படைத்த இந்திய பெண்கள் அணிக்கு வாழ்த்துகள்.
இத்தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் வலம் வந்தது, கூடுதல் சிறப்பாக அமைந்தது.
ஒருங்கிணைந்த, கடின முயற்சி, அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டால், எதையும் சாதிக்கலாம் என்பதற்கு, இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனை, உதாரணமாகி உள்ளது. இந்த வெற்றி, அடுத்து வரும் தலைமுறையினருக்கு துாண்டுகோலாக அமையும்.
இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீராங்கனைகளும் சாம்பியன் தான். எதிர்காலத்திலும் பல்வேறு வெற்றிகள் பெற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.