sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா * ஒரு இடம், ஐந்து அணிகள் போட்டி

/

அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா * ஒரு இடம், ஐந்து அணிகள் போட்டி

அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா * ஒரு இடம், ஐந்து அணிகள் போட்டி

அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா * ஒரு இடம், ஐந்து அணிகள் போட்டி


ADDED : அக் 20, 2025 08:26 PM

Google News

ADDED : அக் 20, 2025 08:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறுவதில் இந்திய பெண்கள் அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை நடந்த போட்டி முடிவில் ஆஸ்திரேலியா (9), இங்கிலாந்து (9), தென் ஆப்ரிக்க அணிகள் (8) அரையிறுதிக்கு முன்னேறின. மீதமுள்ள ஒரு இடத்தை பிடிக்க இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம் உட்பட ஐந்து அணிகள் போட்டியிடுகின்றன.

இந்தியா எப்படி

இந்திய பெண்கள் அணி இதுவரை 5 போட்டியில் 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளி (ரன் ரேட் 0.526) மட்டும் பெற்று, பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அடுத்து நியூசிலாந்து (அக். 23), வங்கதேச (அக். 26) அணிகளை சந்திக்க உள்ளது. இந்த இரு போட்டியில் வென்றால் 8 புள்ளியுடன் அரையிறுதிக்கு முன்னேறலாம்.

மாறாக ஏதாவது ஒரு போட்டியில் தோற்க நேரிட்டால், 6 புள்ளியுடன், மற்ற போட்டிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

தேறுமா நியூசி.,

நியூசிலாந்து அணி 5 போட்டியில் 1 வெற்றியுடன் 4 புள்ளி எடுத்து 5வதாக உள்ளது. அடுத்து இந்தியா (அக். 23), இங்கிலாந்து (அக். 26) அணிகளை எதிர்கொள்ள உள்ளது. இந்த இரு போட்டியில் வென்றால் இந்தியாவை பின்தள்ளி, அரையிறுதிக்கு செல்லும். மாறாக ஏதாவது ஒன்றில் தோற்றால், மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

இலங்கை, வங்கதேச அணிகள் 5 போட்டியில் தலா 2 புள்ளி எடுத்துள்ளன. மீதமுள்ள இரு போட்டிகளில் வெல்லும் அணி 6 புள்ளி பெறும். பின் மற்ற போட்டி முடிவுக்கு ஏற்ப அரையிறுதி வாய்ப்பு தெரியவரும்.

சோகத்தில் ஸ்மிருதி மந்தனா

இந்துாரில் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இங்கிலாந்து (288/8) இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு மந்தனா (88), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (70) கைகொடுத்தனர். அடுத்து வந்த தீப்தி (50) ரன் எடுத்தார்.

கடைசி 30 பந்தில் 36 ரன் மட்டும் தேவைப்பட்டன. கைவசம் 6 விக்கெட் மீதம் இருந்தன. இதனால் இந்தியா எளிதாக வெல்லும் என நம்பப்பட்டது. மாறாக ஸ்மிருதி, ரிச்சா, தீப்தி பொறுப்பற்ற முறையில் நடையை கட்ட, இந்திய அணி 284/6 ரன் எடுத்து 4 ரன்னில் தோற்றதால், அரையிறுதி வாய்ப்பு சிக்கலில் உள்ளது.

இதுகுறித்து ஸ்மிருதி மந்தனா கூறுகையில்,'' கடைசி நேரத்தில் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்க வேண்டும். 'ஷாட்' அடித்த விதம் மோசமாக இருந்தன. விக்கெட் சரிவை நான் தான் துவக்கி வைத்தேன். தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்,'' என்றார்.






      Dinamalar
      Follow us