/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சொந்த மண்ணில் உலக கோப்பை: ஹர்மன்பிரீத் கவுர் உற்சாகம்
/
சொந்த மண்ணில் உலக கோப்பை: ஹர்மன்பிரீத் கவுர் உற்சாகம்
சொந்த மண்ணில் உலக கோப்பை: ஹர்மன்பிரீத் கவுர் உற்சாகம்
சொந்த மண்ணில் உலக கோப்பை: ஹர்மன்பிரீத் கவுர் உற்சாகம்
ADDED : செப் 26, 2025 10:45 PM

பெங்களூரு: ''சொந்த மண்ணில் நடக்கும் உலக கோப்பையில் அணியை வழிநடத்துவது மகிழ்ச்சி,'' என, இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.
இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் (செப். 30 - நவ. 2) நடக்க உள்ளது. 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்திய அணி, தனது முதல் போட்டியில் (செப். 30, கவுகாத்தி) இலங்கையை சந்திக்கிறது.
இந்தியாவில் 12 ஆண்டுகளுக்கு பின், பெண்களுக்கான உலக கோப்பை தொடர் (50 ஓவர்) நடக்கவுள்ளது. கடைசியாக 2013ல் நடந்தது. இரண்டு முறை (2005, 2017) பைனல் வரை சென்ற இந்தியா, ஒரு முறை கூட கோப்பை வென்றதில்லை. இம்முறை சொந்த மண்ணில் சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கூறியது: எந்த ஒரு வீரர்/வீராங்கனைக்கும் அணியை வழிநடத்துவது எப்போதும் சிறப்பான தருணமாக இருக்கும். இதில் சொந்த மண்ணில் நடக்கும் உலக கோப்பையில் கேப்டனாக செயல்படுவது மிகவும் சிறப்பு. நான் கிரிக்கெட் விளையாட துவங்கிய போது, இந்திய அணியை வழிநடத்துவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.
அது, கனவாக மட்டுமே இருந்தது. தற்போது கேப்டனாக செயல்படுவதை என்னால் நம்ப முடியவில்லை. 12 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் உலக கோப்பை நடக்க இருப்பதால், ஒவ்வொரு போட்டியையும் மகிழ்ச்சியுடன் விளையாடுவோம். எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிடாமல், நெருக்கடியின்றி போட்டியில் பங்கேற்போம். நாங்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக மட்டுமே வந்துள்ளோம். போட்டி மீது மட்டும் முழு கவனம் செலுத்துவோம்.
இவ்வாறு ஹர்மன்பிரீத் கவுர் கூறினார்.