/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பூரனுக்கு 'யெஸ்'...ராகுலுக்கு 'நோ': லக்னோ அணியில்
/
பூரனுக்கு 'யெஸ்'...ராகுலுக்கு 'நோ': லக்னோ அணியில்
ADDED : அக் 28, 2024 10:51 PM

மும்பை: ஐ.பி.எல்., லக்னோ அணியில் இருந்து ராகுல் விடுவிக்கப்படுகிறார். நிகோலஸ் பூரன் தக்க வைக்கப்பட உள்ளார்.
ஐ.பி.எல்., தொடரின் 18வது சீசன், 2025ல் நடக்க உள்ளது. இதற்கான வீரர்கள் 'மெகா' ஏலம் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது. ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைக்கலாம்.
தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அக். 31 மாலை 5 மணிக்குள் பி.சி.சி.ஐ., வசம் அளிக்க வேண்டும். நிர்வாகத்துடன் உரசல் ஏற்பட்டதால், லக்னோ அணியில் இருந்து ராகுல் விடுவிக்கப்படுகிறார். இவருக்கு பதில் வெஸ்ட் இண்டீசின் பூரன் கேப்டனாக நியமிக்கப்படலாம். பூரன், மயங்க் யாதவ், பிஷ்னோய் தக்கவைக்கப்படலாம். 'அன்கேப்ட்' வீரர்களாக படோனி, மொசின் கான் இடம் பெறுவர். கடைசி நேரத்தில் ராகுலை ஒப்பந்தம் செய்ய விருப்பப்பட்டால், 'ரைட் டு மேட்ச் கார்டை' பயன்படுத்தி வாங்கலாம்.
சமீபத்திய கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் 504 ரன் குவித்த பூரன் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசுகிறது. இவரை 2017ல் மும்பை அணி ரூ. 30 லட்சத்திற்கு வாங்கியது. 2019ல் பஞ்சாப் அணி ரூ 4.2 கோடிக்கு வாங்கியது. 2022ல் ஐதராபாத் அணி ரூ. 10.75 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. பின் 2023ல் லக்னோ அணி பூரனுக்கு ரூ.16 கோடி கொடுத்தது. தற்போது தக்கவைக்கப்பட இருப்பதால், இவரது ஒப்பந்த தொகை ரூ. 18 கோடியாக உயர உள்ளது.