/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இளம் இந்தியா 'திரில்' வெற்றி * 'உலக' பைனலில் நுழைந்தது
/
இளம் இந்தியா 'திரில்' வெற்றி * 'உலக' பைனலில் நுழைந்தது
இளம் இந்தியா 'திரில்' வெற்றி * 'உலக' பைனலில் நுழைந்தது
இளம் இந்தியா 'திரில்' வெற்றி * 'உலக' பைனலில் நுழைந்தது
ADDED : பிப் 06, 2024 10:47 PM

பெனோனி: ஜூனியர் உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறியது இந்தியா. நேற்று நடந்த அரையிறுதியில் 'திரில்' வெற்றி பெற்றது.
தென் ஆப்ரிக்காவில் ஜூனியர் உலக கோப்பை தொடர் (19 வயது) நடக்கிறது. 20 அணிகள் மோதின. லீக் சுற்று முடிவில் 12 அணிகள் 'சூப்பர்--6' சுற்றில் மோதின. முடிவில் 'பிரிவு -1'ல் முதலிடம் பெற்ற 'நடப்பு சாம்பியன்' இந்தியா, 'பிரிவு 2'ல் இரண்டாவது இடம் பெற்ற தென் ஆப்ரிக்க அணிகள் நேற்று நடந்த முதல் அரையிறுதியில் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் உதய் சஹாரன், பீல்டிங் தேர்வு செய்தார்.
லிம்பானி 'மூன்று'
தென் ஆப்ரிக்க அணிக்கு பிரிட்டோரிஸ், ஸ்டோல்க் (14) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. டேவிட்டை (0), ராஜ் லிம்பானி போல்டாக்கினார். பிரிட்டோரிஸ் 74 ரன் எடுத்து உதவினார். ரிச்சர்டு தன் பங்கிற்கு 64 ரன் எடுத்தார். ஒயிட்ஹெட் 22, கேப்டன் ஜுவான் ஜேம்ஸ் 24 ரன் எடுத்தனர். திரிஸ்டன் (23) உதவ, தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 244/7 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் லிம்பானி 3, முஷீர் கான் 2 விக்கெட் சாய்த்தனர்.
'சூப்பர்' ஜோடி
இந்திய அணிக்கு அர்ஷின், ஆதர்ஷ் ஜோடி மோசமான துவக்கம் தந்தது. மபகாவின் முதல் பந்தில் ஆதர்ஷ் (0) அவுட்டானார். முஷீர் (4), அர்ஷின் (12), பிரியான்ஷு (5) அவுட்டாக, இந்தியா 32/4 என திணறியது. பின் கேப்டன் சஹாரன், சச்சின் தாஸ் இணைந்து அணியை மீட்டனர். 5வது விக்கெட்டுக்கு 171 ரன் சேர்த்து அணியை, வெற்றிப் பாதைக்கு திருப்பினர். இந்நிலையில் சச்சின் 96 ரன்னில் அவுட்டானார்.
ஆரவெல்லி (10), முருகன் (0) அடுத்தடுத்து அவுட்டானர். சஹாரன் (81) ரன் அவுட்டான போதும், இந்திய அணி 48.5 ஓவரில் 248/8 ரன் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.