/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இளம் இந்திய அணி ஏமாற்றம்: ஆசிய கோப்பை வென்றது வங்கம்
/
இளம் இந்திய அணி ஏமாற்றம்: ஆசிய கோப்பை வென்றது வங்கம்
இளம் இந்திய அணி ஏமாற்றம்: ஆசிய கோப்பை வென்றது வங்கம்
இளம் இந்திய அணி ஏமாற்றம்: ஆசிய கோப்பை வென்றது வங்கம்
ADDED : டிச 08, 2024 09:39 PM

துபாய்: ஆசிய கோப்பை (19 வயது) பைனலில் ஏமாற்றிய இந்திய அணி 59 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வங்கதேச அணி 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டது.
ஐக்கிய அரபு எமிரேட்சில், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. துபாயில் நடந்த பைனலில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
வங்கதேச அணிக்கு ரிசான் ஹொசான் (47), முகமது ஷிஹாப் ஜேம்ஸ் (40), பரித் ஹசன் (39) கைகொடுத்தனர். வங்கதேச அணி 49.1 ஓவரில் 198 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் யுதாஜித் குஹா, சேட்டன் சர்மா, ஹர்திக் ராஜ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி (9) ஏமாற்றினார். ஆன்ட்ரி சித்தார்த் (20), கார்த்திகேயா (21), கேப்டன் முகுமது அமான் (26) ஆறுதல் தந்தனர். ஹர்திக் ராஜ் (24) ஓரளவு கைகொடுத்தார். இந்திய அணி 35.2 ஓவரில் 139 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது.
வங்கதேச அணி தொடர்ச்சியாக 2வது முறையாக (2023, 2024) கோப்பை வென்றது. இதுவரை 8 முறை கோப்பை வென்ற இந்திய அணி, முதன்முறையாக பைனலில் தோல்வியடைந்தது.