/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இளம் இந்திய அணி வெற்றி: பெண்கள் 'உலக' பயிற்சி ஆட்டத்தில்
/
இளம் இந்திய அணி வெற்றி: பெண்கள் 'உலக' பயிற்சி ஆட்டத்தில்
இளம் இந்திய அணி வெற்றி: பெண்கள் 'உலக' பயிற்சி ஆட்டத்தில்
இளம் இந்திய அணி வெற்றி: பெண்கள் 'உலக' பயிற்சி ஆட்டத்தில்
ADDED : ஜன 13, 2025 09:19 PM

கோலாலம்பூர்: 'டி-20' உலக கோப்பை (19 வயது) பயிற்சி ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி 119 ரன் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது.
மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான 'டி-20' உலக கோப்பை 2வது சீசன் (ஜன. 18 - பிப். 2) நடக்கவுள்ளது. 'நடப்பு சாம்பியன்' இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, 'ஏ' பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் (ஜன. 19), மலேசியா (ஜன. 21), இலங்கை (ஜன. 23) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
ஒவ்வொரு அணிகளும் பயிற்சி போட்டியில் விளையாடி வருகின்றன. கோலாலம்பூரில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஸ்காட்லாந்து அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
இந்திய அணிக்கு கமலினி (32 ரன்), திரிஷா (26), கேப்டன் நிக்கி பிரசாத் (25), சனிகா (17) கைகொடுக்க, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 164 ரன் எடுத்தது.
சவாலான இலக்கை விரட்டிய ஸ்காட்லாந்து அணி 18.5 ஓவரில் 45 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் ஷப்னம் ஷகில், வைஷ்ணவி சர்மா, சோனம் யாதவ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
மற்ற பயிற்சி போட்டிகளில் ஆஸ்திரேலியா (140 ரன் வித்தியாசம், எதிர்: மலேசியா), வெஸ்ட் இண்டீஸ் (9 ரன் வித்தியாசம், எதிர்: நேபாளம்), அமெரிக்கா (13 ரன் வித்தியாசம், எதிர்: நியூசிலாந்து), வங்கதேசம் (4 விக்கெட் வித்தியாசம், எதிர்: இலங்கை), இங்கிலாந்து (9 விக்கெட் வித்தியாசம், எதிர்: சமோவா), பாகிஸ்தான் (11 ரன் வித்தியாசம், எதிர்: நைஜீரியா) அணிகள் வெற்றி பெற்றன.