ADDED : ஜூலை 15, 2026 11:16 PM

காலே: 'யூத்' டெஸ்டில் இந்தியாவின் லக்சயா, சாகர் விர்க் சதம் கடந்து கைகொடுத்தனர்.
இலங்கை சென்றுள்ள இளம் இந்திய அணி (19 வயது), இரண்டு போட்டிகள் கொண்ட 'யூத்' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி காலேயில் நடக்கிறது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 424/9 ('டிக்ளேர்') ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 186/0 ரன் எடுத்திருந்தது. லக்சயா (93), சாகர் (87) அவுட்டாகாமல் இருந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு லக்சயா ராய்சந்தனி, சாகர் விர்க் சதம் கடந்து கைகொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 295 ரன் சேர்த்த போது சாகர் விர்க் (134) அவுட்டானார். குஷாக்ரா ஓஜா (24), கேப்டன் யாஷ்பர்தன் சவுகான் (6) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய லக்சயா, 150 ரன்னை கடந்தார்.
ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 378/3 ரன் எடுத்து, 46 ரன் மட்டும் பின்தங்கி இருந்தது. லக்சயா (196), குஷ் படேல் (3) அவுட்டாகாமல் இருந்தனர். ஒரு இன்னிங்ஸ் கூட முடியாததால் போட்டி 'டிரா' ஆக வாய்ப்பு உள்ளது.
