sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

இலங்கையை வீழ்த்தியது ஜிம்பாப்வே

/

இலங்கையை வீழ்த்தியது ஜிம்பாப்வே

இலங்கையை வீழ்த்தியது ஜிம்பாப்வே

இலங்கையை வீழ்த்தியது ஜிம்பாப்வே


ADDED : செப் 06, 2025 09:41 PM

Google News

ADDED : செப் 06, 2025 09:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹராரே: இரண்டாவது 'டி-20' போட்டியில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஜிம்பாப்வே சென்றுள்ள இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இலங்கை வென்றது. ஹராரேயில் 2வது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற ஜிம்பாப்வே அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.

இலங்கை அணி 17.4 ஓவரில் 80 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. கமில் மிஷாரா (20), கேப்டன் சரித் அசலங்கா (18), தசுன் ஷனாகா (15) ஆறுதல் தந்தனர். ஜிம்பாப்வே சார்பில் பிராட் ஈவன்ஸ், கேப்டன் சிக்கந்தர் ராஜா தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

சுலப இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் (19), மருமணி (17), ரியான் பர்ல் (20*), தஷிங்கா முசேவிகா (21*) கைகொடுத்தனர். ஜிம்பாப்வே அணி 14.2 ஓவரில் 84/5 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இரண்டாவது குறைந்தபட்சம்

'டி-20' அரங்கில் இலங்கை அணி, தனது 2வது குறைந்தபட்ச ஸ்கோரை (80) பெற்றது. கடந்த ஆண்டு நியூயார்க்கில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் 77 ரன்னுக்கு சுருண்டது இலங்கையின் குறைந்தபட்ச ஸ்கோராக உள்ளது.

இரண்டாவது வெற்றி

'டி-20' அரங்கில் இலங்கைக்கு எதிராக 2வது வெற்றியை பதிவு செய்தது ஜிம்பாப்வே. இதற்கு முன், கடந்த ஆண்டு கொழும்புவில் நடந்த போட்டியில் இலங்கைக்கு எதிராக 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது.






      Dinamalar
      Follow us