/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஜிம்பாப்வே பவுலர்கள் அசத்தல்: 157 ரன்னுக்கு சுருண்டது ஆப்கன்
/
ஜிம்பாப்வே பவுலர்கள் அசத்தல்: 157 ரன்னுக்கு சுருண்டது ஆப்கன்
ஜிம்பாப்வே பவுலர்கள் அசத்தல்: 157 ரன்னுக்கு சுருண்டது ஆப்கன்
ஜிம்பாப்வே பவுலர்கள் அசத்தல்: 157 ரன்னுக்கு சுருண்டது ஆப்கன்
ADDED : ஜன 02, 2025 10:21 PM

புலவாயோ: இரண்டாவது டெஸ்டில் ஜிம்பாப்வே பவுலர்கள் அசத்த, ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 157 ரன்னுக்கு சுருண்டது.
ஜிம்பாப்வே சென்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் 'டிரா' ஆனது. புலவாயோவில் 2வது டெஸ்ட் நடக்கிறது. மழையால் காரணமாக போட்டி தாமதமாக துவங்கியது. 'டாஸ்' வென்ற ஜிம்பாப்வே அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு துவக்கத்தில் இருந்தே ஜிம்பாப்வே பவுலர்கள் நெருக்கடி கொடுத்தனர். ரியாஸ் ஹாசன் (12), அப்துல் மாலிக் (17), ரஹ்மத் ஷா (19), கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி (13), அப்சர் ஜஜாய் (16), ஷாஹிதுல்லா (12) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். இஸ்மத் அலாம் 'டக்-அவுட்' ஆனார். ரஷித் கான் (25) , பரீத் அகமது (17) ஆறுதல் தந்தனர்.
ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 157 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஜியா-உர்-ரஹ்மான் (8) அவுட்டாகாமல் இருந்தார். ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராஜா, நியூமன் நியாம்ஹுரி தலா 3, முசரபானி 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஜிம்பாப்வே அணி, ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்திருந்தது. ஜாய்லார்ட் கும்பி (4), பென் கர்ரான் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

