/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்தது ஜிம்பாப்வே
/
ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்தது ஜிம்பாப்வே
ADDED : ஜன 06, 2025 10:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புலவாயோ: இரண்டாவது டெஸ்டில் 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, தொடரை 1-0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.
புலவாயோவில் இரண்டாவது டெஸ்ட் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 157, ஜிம்பாப்வே 243 ரன் எடுத்தன. ஆப்கானிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 363 ரன் குவித்தது. பின், 278 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 4ம் நாள் முடிவில் 205/8 ரன் எடுத்திருந்தது.
ஐந்தாம் நாள் ஆட்டத்தில் ரஷித் கான் 'சுழலில்' எர்வின் (53) சிக்கினார். ஜிம்பாப்வே அணி 2வது இன்னிங்சில் 205 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான், 7 விக்கெட் சாய்த்தார்.

