/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஜிம்பாப்வே அணி அபாரம்: ஆப்கன் பவுலர்கள் தடுமாற்றம்
/
ஜிம்பாப்வே அணி அபாரம்: ஆப்கன் பவுலர்கள் தடுமாற்றம்
ஜிம்பாப்வே அணி அபாரம்: ஆப்கன் பவுலர்கள் தடுமாற்றம்
ஜிம்பாப்வே அணி அபாரம்: ஆப்கன் பவுலர்கள் தடுமாற்றம்
ADDED : ஜன 03, 2025 11:21 PM

புலவாய: ஆப்கானிஸ்தான் பவுலர்கள் ஏமாற்ற, ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராஜா, கேப்டன் எர்வின் அரைசதம் விளாசினார்.
ஜிம்பாப்வே சென்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் 'டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் புலவாயோவில் நடக்கிறது. ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 157 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 6/0 ரன் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணிக்கு சிக்கந்தர் ராஜா (60) நம்பிக்கை தந்தார். வில்லியம்ஸ் (49) அரைசத வாய்ப்பை இழந்து வெளியேறினார். எர்வின் 75 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 243 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. முசரபானி (4) அவுட்டாகாமல் இருந்தார். ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 4 வீழ்த்தினார். ஜிம்பாப்வே 86 ரன் முன்னிலை பெற்றது.
பின் 2வது இன்னிங்சை துவக்கிய ஆப்கானிஸ்தான் அணி, ஆட்டநேர முடிவில் 46/3 ரன் எடுத்திருந்தது. ரஹ்மத் ஷா (18) அவுட்டாகாமல் இருந்தார்.

