/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
ஈரானை வீழ்த்துமா இந்தியா * ஆசிய கால்பந்தில் எதிர்பார்ப்பு
/
ஈரானை வீழ்த்துமா இந்தியா * ஆசிய கால்பந்தில் எதிர்பார்ப்பு
ஈரானை வீழ்த்துமா இந்தியா * ஆசிய கால்பந்தில் எதிர்பார்ப்பு
ஈரானை வீழ்த்துமா இந்தியா * ஆசிய கால்பந்தில் எதிர்பார்ப்பு
ADDED : செப் 26, 2024 10:51 PM

வியன்டின்: ஆசிய கோப்பை (20 வயது) கால்பந்தில் இந்திய அணி, இன்று வலிமையான ஈரானை எதிர்கொள்கிறது.
ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2025ல் சீனாவில் (பிப். 6-23, 20 வயதுக்குட்பட்ட) நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்றில் 45 அணிகள் மோதுகின்றன. இவை 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணி, மீதமுள்ள 35 அணியில் 'டாப்-5' இடம் பெறும் அணி என மொத்தம் 15 அணிகள் சீன தொடருக்கு தகுதி பெறும்.
இந்திய அணி, 'ஜி' பிரிவில் ஈரான், மங்கோலியா, லாவோசுடன் இடம் பெற்றுள்ளது. தனது முதல் போட்டியில் மங்கோலியாவை 4-1 என வென்றது. இன்று இரண்டாவது போட்டியில் இந்திய அணி, வலிமையான ஈரானை எதிர்கொள்கிறது.
முதல் போட்டியில் இந்திய அணி வீரர் கிப்கென் 2 கோல் அடித்தார். தவிர, தலா ஒரு கோல் அடித்த கெல்வின் சிங், கோரு உள்ளிட்டோரும் நம்பிக்கை தருகின்றனர்.
இதை இன்றும் தொடர்ந்தால் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறுவது எளிதாகும்.
மறுபக்கம் ஈரானை பொறுத்தவரையில் தனது முதல் போட்டியில் 8-0 என லாவோசை வீழ்த்தி, பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதனால் இந்தியாவுக்கு தொல்லை தரலாம். இந்திய அணி பயிற்சியாளர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில்,'' முதல் போட்டியில் பல வாய்ப்புகளை வீணடித்தோம். இன்று சுதாரித்துக் கொண்டு சிறப்பாக விளையாட முயற்சிப்போம்,'' என்றார்.