தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/வரலாறு படைத்தது கேப் வெர்டே

வரலாறு படைத்தது கேப் வெர்டே

வரலாறு படைத்தது கேப் வெர்டே


ADDED : ஜூன் 27, 2026 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2026 11:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹூஸ்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடந்த உலக கோப்பை கால்பந்து 'எச்' பிரிவு லீக் போட்டியில் சவுதி அரேபியா, கேப் வெர்டே அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. கோல்கீப்பராக அசத்திய கேப் வெர்டே அணியின் வோசின்யா 40, சவுதி அரேபியாவின் மூன்று கோல் அடிக்கும் வாய்ப்புகளை (45+2, 66, 90-+2வது நிமிடம்) தடுத்தார்.

இம்முறை உலக கோப்பையில் அறிமுகமான கேப் வெர்டே அணி, ஸ்பெயின் (0-0), உருகுவே (2-2) அணிகளுக்கு எதிரான முதலிரண்டு போட்டிகளை 'டிரா' செய்தது. சவுதி அரேபியாவுக்கு எதிராகவும் அசத்திய கேப் வெர்டே அணி, தோல்வியை சந்திக்காமல் வலம் வருகிறது. மூன்று புள்ளிகளுடன் 'எச்' பிரிவில் 2வது இடத்தை உறுதி செய்த கேப் வெர்டே, முதல் முறையாக 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது. தவிர, உலக கோப்பை அரங்கில் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறிய மிகச்சிறிய நாடானது. அட்லாண்டிக் பெருங்கடலில், மேற்கு ஆப்ரிக்க கரையில் அமைந்துள்ள சிறிய தீவு தான் கேப் வெர்டே. இதன் மக்கள் தொகை 5 லட்சம்.

வரும் ஜூலை 3ல் மயாமியில் நடக்கவுள்ள 'ரவுண்டு-32' போட்டியில் கேப் வெர்டே அணி, 'நடப்பு சாம்பியன்' அர்ஜென்டினாவை சந்திக்கிறது. இதில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளிக்க கேப் வெர்டே அணியினர் முயற்சிக்கலாம்.

ஐந்தாவது அணி

உலக கோப்பை வரலாற்றில் மூன்று லீக் போட்டிகளையும் 'டிரா' செய்து 'நாக்-அவுட்' சுற்றுக்குள் நுழைந்த 5வது அணியானது கேப் வெர்டே. இதற்கு முன் வேல்ஸ் (1958), அயர்லாந்து (1990), நெதர்லாந்து (1990), சிலி (1998) அணிகள் இப்படி சாதித்தன. கடந்த 2010ல் மட்டும் 3 போட்டிகளையும் 'டிரா' செய்த நியூசிலாந்து அணியால் 'நாக்-அவுட்' சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us