/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
பைனலில் செல்சி: கிளப் உலக கால்பந்தில்
/
பைனலில் செல்சி: கிளப் உலக கால்பந்தில்
ADDED : ஜூலை 09, 2025 10:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈஸ்ட் ரூதர்போர்டு: கிளப் உலக கோப்பை கால்பந்து பைனலுக்கு செல்சி அணி முன்னேறியது.
அமெரிக்காவில், உலகின் முன்னணி கிளப் கால்பந்து அணிகள் பங்கேற்கும் 'பிபா' உலக கோப்பை 21வது சீசன் நடக்கிறது. ஈஸ்ட் ரூதர்போர்டில் நடந்த அரையிறுதியில் செல்சி (இங்கிலாந்து), புளுமினென்ஸ் (பிரேசில்) அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய செல்சி அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 3வது முறையாக பைனலுக்குள் நுழைந்தது.
கடந்த 2012ல் பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்த செல்சி அணி, 2021ல் முதன்முறையாக கோப்பை வென்றது. செல்சி அணிக்கு ஜோவோ பெட்ரோ 2 கோல் (18, 56வது நிமிடம்) அடித்து கைகொடுத்தார்.

